Tuesday, June 20, 2006

தட்டுத் தடுமாறி....

எத்தனை நாட்களுக்குதான் பின்னூட்டம் போட்டுக்கொண்டு இருப்பது?இனி பதிவுகள் போடலாம் என்று நினைத்தேன். நண்பர்கள் உதவியுடன் "இது ஆரம்பம்"என்று முதன் முதலா 4 அல்லது 5 வரிகள் போட்டேன்.ஊக்குவித்தனர் சில நண்பர்கள்;ஒருவர் மட்டும் ஊக்கால் குத்தினார்.."சிவஞானசூன்யமே" என்று அவர் என்னை அழைத்ததும் "அட! ஏற்கனவே ஒரு ஞானசூன்யம் இருக்காம்பொல;போட்டிக்கு ஒரு சிவஞானசூன்யம் வேறு வேணுமா"னு நினைச்சு ஒதுங்கினேன்அப்போ அசரீரி மாதிரி ஒரு குரல்:"நீ வெறும்சிவஞானசூன்யம்;அந்த பிறவியோ டிஸ்டில்டு ஞானசூன்யம்;அது வேறு;நீ வேறு;நீ பாட்டுக்குஏதாவது எழுது"என்றதுசரி இதுலாம் சகஜமப்பா னு நினைத்துக்கொண்டுமதுமிதாவிற்கு என் விடைகளைப் பதிவாகபோட்டேன்.இப்ப ஒரு சித்ராபுத்திரன்,"போற வேளையிலே இதெல்லாம் தேவையா"என்றார்.அட எமனோட கணக்கர் ஆச்சேனு விலகி கிட்டேன்."யானை வழி விலகல்...........அஞ்சியோ"னு பழம்பாடல் நினைவுக்கு வந்ததுதிடீர்னு இன்று அதிகாலை எழுத வேண்டுமென ஊக்கம் பிறந்ததுபுதியவர்களை எங்கரேஜ் செய்யுங்க
posted by sivagnanamji at 5:42 PM


இதுவும் வேறிடத்தில் இருந்து வந்ததால் மீண்டும் சில குழப்பங்கள்.

வலைப்பதிவு உலகில் இதெல்லாம் சகஜமப்பா:-)





6 Comments:புதியவர்களை எங்கரேஜ் செஞ்சாச்சு.:-))
இன்னும் எழுதுங்க.உங்க கல்லூரி அனுபவங்கள் நிறைய இருக்குமே.
By துளசி கோபால், at 7:35 PM


நன்றி துளசி
By sivagnanamji, at 11:27 PM


பொறுத்தது போதும் பொங்கி எழு என்று எழுங்கள் சிவஞானம்ஜி அவர்களே. போலி டோண்டு போன்ற ஜாட்டன்களை லட்சியம் செய்யாதீர்கள். அவனால் நம் முடியைக் கூட அசைக்க முடியாது.
அன்புடன்,டோண்டு ராகவன்
By dondu(#4800161), at 12:11 AM



நன்றி டோண்டு அவர்களே
By sivagnanamji, at 3:54 AM
புதியவர்களான நாம எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி அமைச்சிகிட்டா நல்லா இருக்குமா?
எதுக்கும் கவலைப்படாம எழுதுங்க.
By தம்பி, at 8:45 AM


நன்றி தம்பி அவர்களேமிகச்சிலருக்காக நாம் குழு மனப்பான்மையை வளர்க்க வேண்டாமே!
By sivagnanamji, at 11:27 AM

7 comments:

said...

எத்தனை நாட்களுக்குதான் பின்னூட்டம் போட்டுக்கொண்டு இருப்பது?//

அதானே..

.."சிவஞானசூன்யமே" என்று அவர் என்னை அழைத்ததும் "அட! ஏற்கனவே ஒரு ஞானசூன்யம் இருக்காம்பொல;போட்டிக்கு ஒரு சிவஞானசூன்யம் வேறு வேணுமா//

அவன் கிடக்கான். தினமொரு மெய்ல் எனக்குந்தான் அனுப்பிக்கிட்டிருக்கான்.. போக்கத்தவன்..

இதுலாம் சகஜமப்பா னு நினைத்துக்கொண்டு..//

அப்படித்தான் இருக்கணும்:)


."யானை வழி விலகல்...........அஞ்சியோ"னு பழம்பாடல் நினைவுக்கு வந்தது//

இப்படி நிறைய நினைவுக்கு வரட்டும் என்ற வாழ்த்தோடு..

said...

என்னங்க சிஜி,
எத்தனை நாளுக்குத்தான் இப்படித் 'தட்டுத் தடுமாறி' ஒரே இடத்துலெயே நிப்பீங்க?

10 நாளாச்சே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மேலே வாங்க. எழுதுங்க. "ம்ம்ம் யாரங்கே? ஆரம்பிக்கட்டும் கச்சேரி":-)))

said...

tbr joseph அவர்களே
மிக நன்றி

said...

joke party அவர்களே
மிக்க நன்றி!
சிரிப்போம்;சிந்திப்போம்

said...

துள்சிக்கா
ஆ!பழக்க தோஷம் வந்துரிச்சி..நன்றி

said...

நல்ல ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள் !!

said...

நன்றி மணியன் அவர்களே!நீங்கதான் இ கலப்பையை எடுக்கச்சொன்னவர்.
இப்போ கலப்பையைப் பூட்டிவிட்டேன்
நன்றி