Wednesday, July 05, 2006

வ.வா.சங்கம் தேடும் பாடல்

வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைமை "எருமைக் கன்னுக்குட்டி"பாடலைப் பற்றிய விபரம் கேட்டிருந்தது.துளசிகோபால், "தேசி பண்டிட்"டில் கைப்புள்ளையின் வேண்டுகோளையும் 26 பின்னூட்டங்களையும் லிங்க் செய்திருந்தார். சிரிப்புச் சிந்தனையாளரின் ஆசையை நிறைவேற்-
றாமல் விடலாமா? நான்கு நாள் முயற்சியில் கேஸட்டைத் தேடிப் பிடித்துவிட்டேன்
படம்: மந்திரி குமாரி(1950)
தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்
பாடல்: அ.மருதகாசி & க.மு.ஷெரீப் (ஒட்டு
மொத்தமாகப் போடப் பட்டுள்ளது)
இசை: ஜி.ராமநாதன்
இனி, பாடல்:
ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி

எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு

எ.க...என் எ.க...என்.எ.க
எ.க...என் எ,க

ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே...
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே....

எ.க...என் எ.க...என் எ.க
எ.க...என் எ.க

நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி...
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே

எ.க...என் எ.க...என் எ.க
எ.க...என் எ.க

12 comments:

said...

ஏலே நல்லா இறிடே தலயோட ஆசையை நிறைவேற்றி வைத்ததற்க்கு தல கிட்ட சொல்லி உனக்கு ஒன்னு என்னா ரெண்டு போஸ்டா குடுத்துடுவோம்....::))))))))))

said...

எங்கள் தலையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த தங்கமே! தமிழ்ச் சிங்கமே! வாழ்க! நன்றி!

said...

வாங்க சிபி அவர்களே! நன்றி
முதல் பதிவில் விடுபட்ட முக்கியத் தகவல் 2 வது பதிவில் உள்ளது.
மகிழ்ச்சி. தொடர்வோம்

said...

மின்னுது மின்னல் அவர்களே
மரியாதைத் தமிழ் சொல்லித்தரும்
போஸ்ட் வாங்கித் தருவீர்களா?

said...

//ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி//

ஐயோ! ஐயோ! அந்த காலத்துலேயே நமக்குன்னு ஒரு பாட்டு எழுதி வச்ச மாதிரி இருக்குதே?
:)

பாடலைத் தேடிப் பிடித்து வரிகளோடு பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.

said...

//ஏலே நல்லா இறிடே தலயோட ஆசையை நிறைவேற்றி வைத்ததற்க்கு தல கிட்ட சொல்லி உனக்கு ஒன்னு என்னா ரெண்டு போஸ்டா குடுத்துடுவோம்....::))))))))))
//

மின்னலு!
சிவஞானம்ஜி சார், நம்ம சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, பதில் சொல்லிருக்காருங்கிறதால அவருக்கு நம்ம வயசுன்னு நெனச்சிக்காதப்பா. அவரு ரொம்ப சீனியர்.

யாரா இருந்தாலும் புதுசா ஒருத்தரு கிட்ட பேசும் போது இடம், பொருள், ஏவல் கொஞ்சம் பாத்துக்க...ரைட்டா?
:)

said...

வாங்க கைப்புள்ளே வாங்க
"சந்தோஷத்திலேயே மிகப் பெரிய சந்தோஷம் எது?
பிறரை சந்தோஷிக்கச்செய்து அதைப் பார்த்து சந்தோஷப் படுவதுதான்"
சொன்னது நான் இல்லீங்கோ,
டைரக்டெர் கே.பாக்யராஜ்
அதானே நம்ம பாலிசியும்?

said...

வாங்க கைப்புள்ளே வாங்க
மின்னுது மின்னல் பார்த்து முதலில் மிரண்டது நெஜந்தேன்
"அது திருநெல்வெலிப் பக்க வாழ்த்து; வசவில்லே" னு நம்ம தோஸ்த்து
சொன்னாங்க. பின்னூட்டம் பப்ளிஷ் பன்னிட்டேன்.
அவர மிரட்டாதீங்க
இதைவிட பயங்கரமானெதெல்லாம்
போலியாக் கேட்டிருக்கேன்;விடுங்க

said...

உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி///

கைப்புள்ள இது ஒங்களுக்கு மட்டுமா.. க.மணி சிஷ்யருக்குந்தானே:)

ஜி!

பின்னி பெடலெடுக்கறீங்க..

அப்படீன்னா என்ன அர்த்தம்னு தெரியலை.. இது தமிழ்மணத்துல சேர்ந்ததுக்கப்புறம் கத்துக்கிட்ட வாக்கு:)

said...

வாங்க ஜோஸப் வேலைப் பளு
அதிகமா?
எப்படியோ உள்ளே வந்துட்டேன்
சரி பாட்டை பதிவு செய்ய முடியுமா?
என்னிட அவ்வசதி இல்லை. உங்களிடம் உள்ளதா?

said...

I hav heard this song long time before in a private channel. Its a great feeling to remember the song now. Thank you for this post :).

said...

k.srinivaasa ramanujam அவர்களே
வருகைக்கு நன்றி!