Thursday, September 28, 2006

பழனிமலையில் முருகனா?

பெரியார்-ராஜாஜி நட்பு பற்றி விடாதுகருப்பு எழுதியிருந்தார். இது தொடர்பாக மேலும் இரண்டு செய்திகள்:

ஈ.வே.ரா மீது கோபங்கொண்ட அவரது தந்தையார் குடும்பச்சொத்துகளை பழனிமுருகன் பெயருக்கு எழுதிவைத்துவிட்டார்.
ஈ.வே.ரா, தமது ஆப்த நண்பரும் வழக்குரைஞருமான ராஜகோபாலாச்சாரியாரை(பிற்காலத்தில் ராஜாஜி) அணுகினார். அவரும் ஈ.வே.ரா சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார்.
அவர் முன்வைத்த வாதம்:'பழனிமலையில் உள்ளது முருகன் கோவில் இல்லை;அங்கு
தண்டாயுதபாணிக்குத்தான் கோவில் உள்ளது;
எனவே பழனிமுருகன் பெயருக்கு சொத்தை எழுதி
வைத்தது செல்லாதது' என்பதாகும்.
"எதிரிநண்பர் ஈ.வே.ரா"(உபயம்:ராஜாஜி) தமது நண்பரின் மதிநுட்பத்தை வியந்து இந்நிகழ்ச்சியைக்
குறிப்பிடுவார்.

இப்பதிவில் எவ்வித உள்குத்தும் இல்லை. இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதப்பட்டது

22 comments:

said...

நல்ல தகவல் சிவஞானம்ஜி.. சமீபத்தில் ஏதோ புத்தகத்தில் துணுக்காக இதைப் படித்த நினைவு :)

said...

இதுவரை கேள்விப்படாத செய்தி.

said...

சார்
"உள் குத்து" உங்களுக்கெல்லாம் வராது.
நல்ல விஷயம்.கேள்விப்படாதது.

said...

இந்த நிகழ்வு உண்மையா?......
அப்படி இருந்தால் அவ்வளவு அருமையான நட்பின் இன்றைய வழித்தோன்றல்கள் மட்டும் ஏன் இவ்வளவு கோபாவெசத்துடன் இருக்கிறார்கள்?

said...

உண்மையாக இருந்தால் மிகவும் சுவாரசியமான தகவல்.


நன்றி ஐயா

said...

சிவஞானம் சார்,

அய்யா பெரியார் பற்றிய உங்கள் நினைவுகளுக்கு நன்றி.

இதனை என் பதிவிலேயே நீங்கள் மறுமொழியாக எழுதி இருக்கலாம். ஆனால் உங்கள் சேத்தாளிக்கு பயந்து தனிப் பதிவாக எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!
:))

said...

சொத்துக்காக தன் தந்தையின் கடைசி விருப்பத்தை அழித்தது ஒரு நல்ல மகன் செய்வதல்ல.

பணத்திற்காக இப்படி ஒரு குறுக்குவழியில் வாதாடி ஜயித்து அதனை அனுபவிப்பதும் சரியல்ல.

தன் கொள்கைக்கு விரோதமானது என்பதாலா, அல்லது, எப்படி கிடைத்தாலும் சொத்து வேண்டும் என்பதாலா, என்பது எனக்கு தெரியாது, எப்படியாய் இருந்தபோதிலும், தன் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும் தன் தகப்பனாரின் உயிலுக்கு விரோதமாக சென்று சொத்தை அபகரிப்பது....

ஈ.வே.ரா. வை மேலும் புரிய வைத்த இந்த அருமையான பதிவுக்கு நன்றி.

நீங்கள் மிகவும் குறைவாகவே எழுதுகிறீர்கள். மேலும், இம்மாதிரி தெரியாத பல விஷயங்களை எழுதினால் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.


நன்றி

said...

பொன்ஸ் சொல்றாங்க:
/நல்ல தகவல்....படித்ததாக நினைவு/

வருகைக்கு நன்றி.
படித்த நினைவும் இருக்கலாம்;கேட்ட
நினைவாகவும் இருக்கலாம்.
நாகேஸ்வரர் பூங்கா வலைப்பூவர் சந்திப்பில் கேட்டிருக்கலாம்

said...

துளசி கோபால் சொல்றாங்க:
//இதுவரை கேள்விப்படாத செய்தி//

வருகைக்கு நன்றி!
"தெரியாததைத் தெரிந்து கொள்ளவும்,தெரிந்ததைப் பிற்ர்க்குச்
சொல்லவும்"தான் வலைத்தளத்திற்கு
வந்திருப்பதாக முதற்பதிவிலேயே
குறிப்பிட்டேனே.
டீச்சரே மறந்தால் என்ன செய்வது?
ஒரு டோஸ் memory plus எடுங்க.

said...

வடுவூர் குமார் வருகைக்கு நன்றி

said...

மெள்ல்ஸ்,பெங்களூர் சொல்றாங்க:
//இந்த நிகழ்வு உண்மையா?......//

உண்மை உண்மை 100% உண்மை
உங்கள் ஆதங்கம் புரிகின்றது
"மனம் வெளுக்க"(பாரதி)வேண்டுமே

said...

மெளல்ஸ்,பெங்களூர்

வருகைக்கு நன்றி
(ஸாரி, விட்டுப்போச்சு)

said...

முத்து(தமிழினி)சொல்றாங்க:
//இந்தத் தகவல் உண்மையானால்..//

வருகைக்கு நன்றி
நீங்கதான் முத்து(தமிழினி)என்பது
எவ்வளவு சாஸ்வதமான உண்மையோ
அந்த அளவிற்கு இதுவும் உண்மைதாங்க

said...

விடாது கருப்பு சொல்றாங்க:
//அய்யா பெரியார்....நன்றி
இதை என் பதிவிலேயே.........என
நினைக்கிறேன்//

வருகைக்கு நன்றி
உங்களுக்குத் தெரிந்த தகவலைத்தான்
நான் பதிவிட்டேன்
எனக்கேத் தெரியாத தகவலை நீங்கள்
சொல்கின்றீர்கள்

உங்கள் பதிவில் போட்டிருக்கலாம்தான்
ஆனால் ஏதோ ஓர் ஆசை;தனிப்பதிவாகப் போட்டேன்

said...

ஜயராமன் சொல்றாருங்க
//சொத்துக்காக.........இருக்கும்//

வருகைக்கு நன்றி
இந்நிகழ்வைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியும் என்பதை
உங்களிடம் மட்டுமிருந்தே
தெரிந்து கொள்ள முடியும்

said...

நன்றி ஐயா!

ஏற்கனவே இருமுறை இதை நீங்கள் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் ஊடகங்களில் அவ்வளவாக சொல்லப்படாத இந்த தகவல் மற்ற நண்பர்களுக்கு தெரியவேண்டும் என்பதால் தான் உங்களை பதிவாக போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்....

//சொத்துக்காக தன் தந்தையின் கடைசி விருப்பத்தை அழித்தது ஒரு நல்ல மகன் செய்வதல்ல. //

ஆமாம். இவங்க அப்பா இவரோட சொத்தை எல்லாம் ஊருக்கு எழுதி வெச்சிட்டா இவரு வாயிலே லாலிபாப் வெச்சிக்கிட்டு கம்முன்னு போயிடுவாரு.... ஏன் சார் உங்களுக்கு இந்த கொலைவெறி?

பெரியார் அவருடைய சொத்துக்களை எல்லாம் இயக்கத்துக்கு எழுதிவைத்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பது வரலாறு.....

said...

லக்கிலுக் சொல்றாருங்க

வருகைக்கு நன்றி லக்கிலுக் அவர்களே

said...

இரண்டு "யாரோ"க்களும் ஒரு ஐ டி
பதிவரும் சொல்றாங்க
**********************************************************************

உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன.ஆயினும் பதில் உண்டு:

ராஜகோபாலாச்சாரி /ராமஸ்வாமி நாயக்கர் இரண்டுமே தவிர்க்கப்பட
வேண்டிய சொற்கள்தான்

ராஜாஜி,பெரியார் எனும் சொற்களைப்
பயன்படுத்துவதே பொருத்தமாகும்

ராஜகோபாலாச்சாரி(ராஜாஜி)யார்
என்றுதானே நான் குறிப்பிட்டுள்ளேன்?

said...

//படித்த நினைவும் இருக்கலாம்;கேட்ட
நினைவாகவும் இருக்கலாம்.
நாகேஸ்வரர் பூங்கா வலைப்பூவர் சந்திப்பில் கேட்டிருக்கலாம்
//
ஆமாம் ஆமாம், நாகேஸ்வர ராவ் பூங்காவில் சொன்னீர்கள். ஆனால், சில வருடங்களுக்கு முன்னால் குமுதம் ஜங்க்ஷன் என்று ஒரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. அந்த இதழில் இது போன்ற துணுக்குகளைப் பெட்டிச் செய்தியாக இடுவார்கள். அங்கேயும் படித்திருக்கிறேன் :)

said...

பொன்ஸ் சொல்கின்றார்:
//..சில வருடங்களுக்கு முன் குமுதம்
ஜங்ஷனில்....//

வருகைக்கு நன்றி,பொன்ஸ்!
பல வருடங்களுக்கு முன் பெரியார்
சொன்னதைத்தான் சில வருடங்களுக்குமுன்
குமுதம் ஜங்ஷன் பதிப்பித்தது

said...

சுவாரசியமான தகவல்.

ஜயராமன் சொன்னது: //பணத்திற்காக இப்படி ஒரு குறுக்குவழியில் வாதாடி ஜயித்து அதனை அனுபவிப்பதும் சரியல்ல...
இப்படி வாதாடிய ஜஸ்டிஸ் பார்ட்டியும் தப்பு, அனுபவித்த தி.க.வும் தப்பு - அப்படியா:-))

போற வழியில இதையும் கிளப்பி விட்டுட்டுப் போகலாமே என்று பார்த்தேன்;-)

said...

KEKKE PIKKUNI சொல்வது:

/ஜயராமன்.//...இப்படி......தப்பு//

வாங்க வாங்க! முதல் வருகை நன்றி!

அவர் எப்போ அப்படி சொன்னார்?

நாரதரி யே வாழ்க!