Thursday, October 05, 2006

சிபி, பொன்ஸ்,ஜயராமன் அய்யங்கள்....

மா.சிவகுமார் எழுதும் பொருளாதாரக் கட்டுரைகளின் பின்னூட்டங்களில் நாமக்கல் சிபி, பொன்ஸ், ஜயராமன் ஆகியோர் சில வினாக்களை எழுப்பியுள்ளனர்.அவை பற்றி சிறு விளக்கங்கள்....
நாமக்கல் சிபி: நிறைய உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது சந்தைக்கு அனுப்பினால் தேவையும் அதிகரிக்கும்;நல்ல விலையிலும் விற்கலாமே!
செய்பொருள்தொழில்களில் (manufacturing industriees) இது ஓரளவு சாத்தியம். விளைபொருட்களை இருப்பில் வைப்பதற்குக் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் கிடைக்குமா? எலி,புழு,பூச்சிகளால் ஏற்படும் அழிவிலிருந்து (இந்தியாவின் மொத்த தாணிய உற்பத்தியில் 10% இப்படி நாசமாகின்றது)
ந்ப்படி காப்பாற்றுவது?விவசாயிகள் உடனடியாகத் தீர்க்க வேண்டியக்கடங்களை எப்படித் தீர்ப்பது?அடுத்த பருவத்திற்குவேண்டிய நடைமுறைச்செலவிற்கு என்ன செய்வது?
செய்பொருள்களை இருப்பில் வைக்கலாம். ஆயினும் மூலதனச்செலவுகள்? பருவ மாறுதல்கள்.மக்களின் சுவை ,விருப்பெச்சங்கள், பாவனை(tastes, preferences, fashion)மாறினால் தேவை பாதிக்கப்படும். பதிலிகள் தோன்றலாம்;புதிய பொருட்கள் வரலாம்.SALES! SALES! என்று கடைக்காரர்கள் ஏலம் போடுவதன்
தாத்பரியம் புரிகின்றதா?
நிறைய உற்பத்தி, ஸ்டாக் வைப்பது, அப்பப்போ ரிலீஸ் செய்வது....ம்..ஊஹும் ....நடைமுறை சாத்தியமற்றது

பொன்ஸ்:மரணமடந்தவர் தமது ஆயுட்காலத்திலேயே தமது சொத்திலிருந்து தீர்வை கட்ட ஒதுக்கீடு செய்திருந்தால் அது மரணத்தீர்வை எனப்படும்;மணமடைந்தவர் சொத்தில் இருந்து செலுத்தப்படும். இந்தியாவில் இத்தீர்வை விதிக்கப்படுவதில்லை
மரணித்தவர் தக்க ஏற்பாடு செய்யவில்லை. வரிசுகளுக்கு சொத்து கைமாறும். வாரிசுகள் தாம் அடைந்த சொத்தின் மதிப்பின் அடிப்படையில் தீர்வை செலுத்தினால் அது எஸ்டேட் ட்யூடி எனப்படும். இந்தியாவில் 1985 லிருந்து இது நீக்கப்பட்டுவிட்டது

ஜயராமன்:சமூகச்சர்வாதீனம் அல்லது அரசுச்சர்வாதீனத்தால்(social monopoly or state monopoly) அனைவருக்கும் நன்மையே! தனியார் சர்வாடீனத்தில் நிறைவுப்போட்டியைவிட விலை அதிகம்;உற்பத்தி குறைவு. ஆகவே வேலை வாய்ப்பு குறைவு. சர்வாதீனத்தைக் கட்டுப்படுத்த அரசு சட்டமியற்றும்பொழுது வழக்கமான முறைகேடுகள் ஏற்படவும் கூடும்

12 comments:

said...

சிஜி,
அப்படீன்னா, 1985க்கு அப்புறத்திலிருந்து இந்தியர்கள் நிம்மதியா மரணமடைகிறார்கள்னு சொல்லுங்க.. :)

எஸ்டேட் ட்யூட்டியைக் கூட இப்போது நீக்கிவிட்டார்களா என்ன?

said...

விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும். பரிசு இருக்கிறதா?

said...

ஐயா, குற்றம் கண்டு பிடிப்பதாய் எண்ண வேண்டாம். ஐயங்கள் என எழுதாமல் அய்யங்கள் என எழுதினால் நன்றாக இல்லையே....

said...

பொன்ஸ் கூறியது:

வருகைக்கு நன்றி!
இந்தியாவில் டெத்ட்யூட்டிக்குப்பதில்
எஸ்டேட் ட்யூட்டி விதிக்கப்பட்டது
எஸ்டேட்ட்யூட்டியும் 1985 ல் விலக்கப்பட்டது

வரி என்றால் நேர்முகவரியை மட்டுமே வரியாகக் கருதுகின்றீர்களா?
குழந்தையும், குறைந்த வருமானம் பெறுவோரும் பால்பவுடர், மருந்து, ஆயத்த உடைகள் போன்றவை வாங்குவதில்லையா? அப்பொழுது விற்பனைவரி கொடுப்பதில்லையா?
வரி என்பதில் நேர்முக மற்றும் மறைமுக வரிகள் அடங்கும்

said...

நாமக்கல் சிபி கூறியது:
//விளக்கம் இருக்கட்டும்.பரிசு இருக்கிறதா?//

வருகைக்கு நன்றி.
திசை மாறிய கேள்வி
மா.சிவகுமார் அறிவிப்பார்

said...

இலவசக்கொத்தனார் கூறியது:
//.....அய்யங்கள் என்று எழுதினால்
நன்றாக இல்லையே?//

வருகைக்கு நன்றி!
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை
நடைமுறைப் படுத்தினார்;
எம்.ஜி.ஆர் சட்டபூர்வமாக்கினார்.

இளையதலைமுறை ஐ யை மறந்துவிட்டது; ஐ எனும் எழுத்து
இருப்பதே பல குழந்தைகளுக்குத் தெரியாது
இப்பொழுது போய் இப்படி கேட்கின்றீர்களே!

said...

//இளையதலைமுறை ஐ யை மறந்துவிட்டது; ஐ எனும் எழுத்து
இருப்பதே பல குழந்தைகளுக்குத் தெரியாது
இப்பொழுது போய் இப்படி கேட்கின்றீர்களே! //

ஐ....?

ஹை!!!

said...

துளசி கோபால் கூறியது:
//ஐ.....?
ஹை!!!//

வருகைக்கு நன்றி!
பார்த்தீங்களா...'ஐ' போனதுலே
உங்களுக்கே இவ்வளவு சந்தோஷம்!
'ஐ'எழுத எவ்வளவு வளைச்சு வளைச்சு இழுக்கணும்?
'ஐ' க்கும் 'ஜ' வுக்கும் வித்தியாசம்வேற தெரியனும்!
பிள்ளைகள் கொடுத்து வச்சவங்க!

பொதுவா 'I'[நான்]மறைந்து 'WE' [நாம்] எனும் உணர்வு வரணுமில்லே!

said...

என்ன ஜி!

நீங்க அருமையான பொருளாதர வகுப்பு எடுத்திக்கிட்டிருக்கறப்போ ஐ, ஹைன்னுக்கிட்டு டிஸ்டர்ப் பண்றாங்க?

தலையில ஒரு குட்டு குடுத்து ஒக்கார வைங்க..

என்ன பேராசிரியர் நீங்க.. சரிவராது:(

said...

அடேயப்பா! வசிஷ்டர் வாயாலே பிர்மரிஷி பட்டமா!

நன்றி! நன்றி!!

said...

சிவஞானம் ஐயா,

நீங்கள் தெளிவுபடுத்தியது...

//சமூகச்சர்வாதீனம் அல்லது அரசுச்சர்வாதீனத்தால்(social monopoly or state monopoly) அனைவருக்கும் நன்மையே! தனியார் சர்வாடீனத்தில் நிறைவுப்போட்டியைவிட விலை அதிகம்;உற்பத்தி குறைவு. ///

தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.

சமூக சர்வாதீனத்தால் அனைவருக்கும் நன்மையே என்பதை ஒப்ப முடியவில்லை. இதை பொருளாதாரம் எவ்வாறு நிருவுகிறது? அல்லது, இது தங்கள் கருத்தா!! அல்லது, இது ஒரு தியரியா? இல்லை நிரூபிக்கப்பட்ட ஒரு பொருளாதார கோட்பாடா?

அரசாங்கம் மோனோபாலியாக நடத்திய பல விஷயங்கள் பொருளாதார விலையில் சமுதாயத்துக்கு அதிகமாகவே இருந்திருக்கின்றன. உலகெங்கும், தனியார் பொருளாதாரத்தால் பொருட்களின் விலைகள் சரிந்து வந்திருக்கின்றன. இதற்கு போட்டிதான் முக்கிய காரணம் என்பதை நான் அறிவேன்.

ஆனால், எனக்கு விளங்காதது இதுதான். அரசாங்க சர்வாதீனம் தனியாரின் சர்வாதீனத்தை விட எப்படி நலம் என்று ஆகும்? இது ஒரு நம்பிக்கைதானா?

நன்றி

said...

வருகைக்கு நன்றி ஜயராமன் அவர்களே!

விளக்கம் பெரிது; பின்னூட்டப்பதிலாகப் போடாமல்
"அரசுச் சர்வாதீனம்" என்று தனிப்பதிவாகவேஇட்டுள்ளேன்; பார்க்கவும்.