Sunday, December 24, 2006

வலைப்பதிவர் ரகசிய சந்திப்பு-சென்னை

நேற்று (சனிக்கிழமை 23/12/06) மாலை! சென்னை கதீட்ரல் சாலை. தோப்புக்குள்ளிருக்கும், புகழ்பெற்ற "ட்ரைவ் இன்".சிற்றுண்டிக்காகக் காத்திருந்தேன். பின்புறமிருந்து பழகிய சில குரல்கள்! மெல்லத் திரும்பினேன். அங்கே,
பறந்து வந்திருக்கும் ட்டீச்சர்,

வலைப்பூவர்கள் விபரம் திரட்டியவர்,

நிர்மலமானவர்,

திருமகள்,

'மீன்'மீது 'பிரிய'மானவர்,

யானைத்தோழி

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியையும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்!

மற்றும் சிலர்
சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்தேன்!

'பீட்டா ப்ளாக்கர்', '33% இடஒதுக்கீடு', 'வலைதள முன்னேற்றம்' போன்ற சொற்கள் காதில் விழுந்தன.
சுற்றுச்சூழ்நிலையையும் மறந்து அப்படி
என்னதான் பேசியிருப்பார்கள்?

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

testing

பொன்ஸ்~~Poorna said...

ஆஹா.. அந்தச் சந்திப்பிலும் அனானி உளவாளிகளா!!! :)))

siva gnanamji(#18100882083107547329) said...

பொன்ஸ் சொல்வது:

//ஆஹா..அந்தச் சந்திப்பிலும் அனானி உளவாளிகளா!!! :)))//

வாங்க பொன்ஸ்! வருகைக்கு நன்றி!

"எங்கெங்கு காணினும் சக்தியடா.."
பாடல் நினைவுக்கு வருகின்றது!

siva gnanamji(#18100882083107547329) said...

ஒரு பிற்சேர்க்கை!

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியையும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்!

இது இப்பொழுது வந்த தகவல்.......