Sunday, December 17, 2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு-12-17-06

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. குறுகியகால அறிவிப்பு எனினும் 22 பதிவர்கள் வருகை தந்தனர். இறுதி நேரத்தில் இடம் மாற்றப்பட்டது எனினும் தொலைபேசித்தகவல் தகவல் கொடுக்கப்பட்டதால் பனகல் பூங்காவிற்குச் சென்று பின்னர் நடேசனார் பூங்காவிற்கு வந்தோரும் உண்டு. கடைசிநேர இடமாற்றம், ஊடுருவலைத் தடுத்தது.

பெண்பதிவர்களின் வருகை 100 % அதிகரித்தது!
ஆமாங்க! சென்றமுறை இருவர் வந்தனர்; இம்முறை நால்வர்! இது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றம்!

துளசி கோபால், திருவள்ளுவர் ஆகியோரின் வருகையும் ஆக்கபூர்வ பங்கேற்பும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இரண்டுமுறை(விரும்பியோருக்கு அதற்கு மேலும்) பால் இனிப்புகள் வழங்கப்பட்டது.(காசு வசூலிக்கப்படவில்லை). பூங்காவிற்குள் காபி & டீ
எடுத்துவரக் கூடாது என்பதால் நோ காபி; நோ டீ!

புகைப்படங்கள் எடுக்கையில் இருவர் மட்டுமே மிஸ்ஸிங். பல காமிராக்கள் பலமுறை
கிளிக்கின!

இரவு 7 மணிக்குமேல் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.....

இனி, நண்பர்கள், சந்திப்பு பற்றிய தமது எண்ணங்களைத் தொடர்வார்கள்....................

16 comments:

said...

சார்,
உங்களை நான் முந்திக்கிட்டேன்... சந்திப்பு பத்தி என் பதிவு வந்து முக்கால் மணி நேரமாகி விட்டது :)

said...

சென்னை வலைப்பதிவர் ஒன்றுகூடல் பற்றிய தகவல்களைச் சுடச் சுடத் தந்தமைக்கு மிக்க நன்றி.

said...

அன்புடன்...ச.சங்கர் சொல்வது:

// உங்களை நான் முந்திக்கிட்டேன்.//

துள்ளுவதே இளமை!
கங்கிராட்ஸ்!
வருகைக்கு நன்றி!

said...

ஐயா,

சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு அமெரிக்க முறைப்படி தேதியைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்? :-))

said...

வெற்றி சொல்வது:
//சென்னை வலைப்பதிவர் ஒன்றுகூடல்.... மிக்க நன்றி.//

வாங்க வெற்றி! வருகைக்கு நன்றி!

said...

ஜி.. அசத்துறீங்க... நான் எப்பவுமே லேட்... அதனால லேட்டாகவே வருகிறேன்.
;-)))))

said...

குமரன் சொல்வது:
//சென்னை வலைப்பதிவர் ..... குறிப்பிட்டிருக்கிறீர்கள்..//

வாங்க குமரன், வருகைக்கு நன்றி....

said...

எஸ்.பாலபாரதி சொல்வது:
//...நான் எப்பவுமே லேட்....//

வாங்க பாலபாரதி,வருகைக்கு நன்றி!
ஆங்! நீங்க லேட்டா வந்தாலும்
லேட்டஸ்டா வர்ரீங்களே.....
நன்றி!

said...

ஜி!

வெளுத்த தலை ஒங்களுது மட்டுந்தான் போலருக்கு:)

என்னைப் போன்ற பெருசுங்க சார்பில ஆஜராயிருக்கீங்க போலருக்கு.

நன்றி..

ஏன கூட்டத்தில் நடந்தவைகளைக குறித்து ஒன்றுமே எழுதவில்லை?

மற்றவர்கள் எழுதிவிட்டனரே என்பதாலா?

said...

ட்டி.பி.ஆர்.ஜோஸப் சொல்வது:
//வெளுத்த தலை ஒங்களது மட்டும்தான் போலிருக்கு..//

//மற்றவர்கள் எழுதிவிட்டனரே என்பதாலா?//

வாங்க ஜோஸப், வருகைக்கு நன்றி!
புது"மை"(dye)சில வெளுத்த தலைகளெ மறச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

ஆமாமா...மற்றவர்களுக்கும் வழிவிடனும்லே!

said...

சிவஞானம் சார்....ஒரு தலைமை ஆசிரியர் முன்னாடி நின்னு ரொம்ப வருசமாச்சு. அந்தக் குறை நேத்து தீந்திருச்சு. :-) ஒவ்வொரு பேச்சையும் கவனிச்சுப் பேச வேண்டியதாப் போச்சே! :-)

புதுமையோ பழமையோ தலமைக்கு அது அவசியந்தான்னு நெனைக்கிறேன். இல்லைன்னா நம்மூர்ல மை விற்பனை இவ்வளவு நல்லா நடக்குமா!

said...

இவ்வளவு பேர் கூடி நிக்கிறதுக்கு யாரவது திருஷ்டி கழிச்சாங்களா?:-)
துளசி தெரிகிறது.
பக்கத்தில் நிற்பது (அருணா?)
மதுமிதா? யாரோ?
ஜி சார், துளசியையும் மத்தவங்களையும் நான் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லுங்க.

said...

ஜி.ராகவன் சொல்வது:

//...புதுமையோ பழமையோ அது தலைமைக்கு அவசியந்தான்.....//

வாங்க ஜிரா, வருகைக்கு நன்றி!
நீங்க சொல்வது உண்மைதான்....
ஆனாலும் அது முடிவளத்தைப்
பாதிக்குமாமே...?

said...

வல்லிசிம்ஹன் சொல்வது:

//...யாராவது திருஷ்டி கழிச்சாங்களா...//

ஓ...கழிக்கப்பட்டதே!
ஒரு பூசனிக்காய் தானே விழுந்து, சிந்தாமல் சிதறாமல் எழுந்து
கூட்டத்தில் கலந்து கொண்டதே-அதுவும் ஒரு வலைப்பதிவாளர் என்பதால்!
நீங்கதான் வெளிநாடு சென்றிட்டீங்க...
அங்கு அனைவரும் நலமா?

said...

//ஒரு பூசனிக்காய் தானே விழுந்து, சிந்தாமல் சிதறாமல் எழுந்து
கூட்டத்தில் கலந்து கொண்டதே-அதுவும் ஒரு வலைப்பதிவாளர் என்பதால்!/
சிஜி, யாரைச் சொல்றீங்க? :) பூசணிக்காய் தானே? இல்லை பூசனிக்காயா? ;)

said...

வாங்க, பொன்ஸ்,வருகைக்கு நன்றி..

பூசணி விழுந்த வேகத்தில் எழுந்ததைப்
பார்க்கவில்லையோ?
கோலாகலமானக் காட்சியைக் காணத்தவறிவிட்டீர்களே!