Friday, November 10, 2006

"மழை"யால் "ஈ'

"மழைப் போட்டி"யில் முதற் பரிசு....தோழியர் கெளசல்யாவுடன் பங்கிட்டுக் கொள்கின்றீர்கள்...
உடனடிப் பரிசு....'போர்ப்ரேம்ஸ்' ப்ரிவியூ அரங்கில்...
படம்?
"ஈ"
தடாலடி அறிவுப்புகள் தொடர்ந்தன...


குளுகுளு அரங்கில் 'சில்'லென ஆரம்பம்.
கதை....'அண்ணன்' லக்கிலுக்(அட! வலையுலகில் நம்ம சீனியர்பா) முன்பே விமர்சனப்பதிவில் பதிந்துள்ளார்.
வல்லாதிக்க நாடுகள், வளர்முக நாடுகளை எப்படி தமது 'சோதனைஎலி'களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன? ஏழைநாடுகளின் 'கறுப்புஆடுகள்' எவ்விதம் துணை போகின்றன? பாதிக்கப் படுவது யார்? பயனடைவது யார்? பூனைக்கு மணி கட்டப் போராடும் எலிகள் என்னவாகின்றன?-இதுதான் கதைக் கரு!
நறுக்கு தெறித்தாற்போல் நெருப்பு வசனங்கள்;இயல்பான காட்சி அமைப்பு;இதமான படப்பிடிப்பு...
ஜனநாதன் இயக்கம்.நிறைய விஷயங்களை சொல்லாமலே சொல்கின்றார்-காக்கா கோட்டையில் சிங்காரவேலர் பேனர்......டாக்டர் ராமகிருஷ்ணனின் நெற்றி......நெல்லை கண்ணனின் தாடி,தொப்பி,உயிர்த்தியாகத்தின் பொழுது அவர் அமர்ந்திருக்கும் பாணி........இது போல் நிறைய உண்டு!
மழைக்காட்சிகள் வருகின்றன;நாயகி நனைகிறாள்;விரசமில்லை;பெண்மையை எக்ஸ்ப்ளாய்ட் செய்யாததற்கு டைரக்டருக்கும் பாராட்டுகள்!


ஒரு நல்ல படம், முடிந்த பின்னரும்,பார்த்தவர் மனதில் சில அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்....
அத்தகைய அதிர்வை 'ஈ' ஏற்படுத்துகின்றது!

7 comments:

said...

//'அண்ணன்' லக்கிலுக்//

அடக்கடவுளே! :-)))))

said...

//...நறுக்கு தெறித்தாற்போல் ...//

விமர்சனமும் அருமையா சின்னதா, கச்சிதமா இருக்கு.

பரிசுக்கு வாழ்த்துக்கள்.

said...

முதல் பரிசு பெற்றதற்கும், 'சினிமா விமரிசகர்' ஆனதுக்கும்
மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

'மழை'யிலும் 'ஈ' வரும்:-)))

said...

பரிசுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல படம். நானும் கூட பார்த்தேன்.

said...

லக்கிலுக்,
நன்மனம்,
துளசி கோபால்,
யெஸ்.பாலபாரதி
வருகைக்கும் வாழ்த்திற்கும்
நன்றி!

said...

ஜி!

க்ளைமாக்ஸ் படு செயற்கையா இருந்ததே..

said...

ட்டி.பி.ஆர். ஜோஸப் சொல்வது:

//க்ளைமேக்ஸ் படு செயற்கையாக
இருந்ததே//

வாங்க ஜோஸப்,வருகைக்கு நன்றி!
இந்தக் கதையில் இதைத் தவிர்த்திருந்தால் கதை கந்தரகோளம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்