Wednesday, October 25, 2006

"கடன்பட்டார் நெஞ்சம் போல......."

"கடன்பட்டார் நெஞ்சம் போல(போலும்?) கலங்கினான் இலங்கை வேந்தன்"-- இடஞ்சுட்டி விளக்கக் கோரியிருந்தார், சக வலைப்பதிவாளர் ஒருவர். அவர்சார்பில் விடைதேடி வலைப்பதிவுகளில் புகுந்தேன்.......

அய்யகோ!
வெவ்வேறான இருவிடைகள் கிடைத்துள்ளன. அவை:

(1)"இன்று போய் நாளை வா" என்று இராமன் இராவணனை
அனுப்பிவைத்த பின்னர், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில்
இவ்வாறு கூறப்படுவதாக ஒரு பதிவில் கூறப்பட்டு உள்ளது.
(2)தன்மகன் இந்திரஜித் (மேகநாதன்) வீரமரணம் அடைந்த நிலையில்,இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில் இவ்வாறு
கூறப்படுவதாக மற்றொரு பதிவில் விளக்கப்பட்டு உள்ளது.

இவையிரண்டில் ஒன்று தவறானது; அல்லது இரண்டுமே தவறாக
இருக்கக்கூடுமோ?

விபரம் அறிந்தவர்கள் சரியான இடஞ்சுட்டி விளக்குவார்களா?

4 comments:

said...

பதிவுகளில் வந்ததுபத்தி விவரம் தெரியாது.
ஆனா சினிமாவுலே இன்றுபோய் நாளை வாராய் ( பாட்டு சி.எஸ். ஜெயராமன்) பாடுனப்பத்தான்
க.ப.நெ.க.இ.வே ன்னு பார்த்ததா நினைவு. நேரம் கிடைக்கும்போது ச.ரா. பார்த்துட்டுச் சொல்றேனே.
அதான் வாங்கிட்டு வந்து வச்சுருக்கேன்லெ :-)))

said...

இதே டாப்பிக்கில் நான் போட்ட இப்பதிவைப் பார்க்கவும். http://dondu.blogspot.com/2006/08/blog-post_31.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

துளசி கோபால் சொன்னது:
//..ச.ரா பார்த்துட்டு சொல்றேனே..//

வருகைக்கு நன்றி துளசிகோபால்!

அய்யா பாருங்க,அம்மா பாருங்க
அண்ணே பாருங்க,அக்கா பாருங்க
தம்பி பாருங்க,தங்கச்சி பாருங்க
நாங்கதான் தியேட்டர்லே தலைவனைத்
தேடுறோம்னா, நியூஸியிலே சினிமாவிலே(சம்பூர்ண ராமாயண்ம்)
இலக்கியத்தெ தேடுறாங்க

said...

டோண்டு சொன்னது:
//...இப்பதிவைப் பார்க்கவும்...//

வருகைக்கு நன்றி
படித்தேன்.ராமகாதையைப் படிக்கப் போகிறேன்.