Wednesday, August 23, 2006

பின்னூட்டத்திற்குப் பரிசு!

"பொருளாதார அறிவு சிறிதேனும் அற்றவர்கள் முழுமையான மனிதனாகக் கருதப்பட மாட்டார்கள்"என்பதாக ஓர் ஆங்கில வழக்கு உண்டு..ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ--- படித்தோ, படிக்காமலோ--பொருளாதார அறிவுடன்தான் செயல்படுகின்றோம். "Economics is commonsense made more difficult" என்பார்கள். கடினப்படுத்தப்பட்ட சாதாரணப் பொதுஅறிவை எல்லோர்க்கும் புரியும் எளிய தமிழில் விளக்கி
வருகின்றார்,திரு சிவகுமார்; எளிமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று மலினப்படுத்தவில்லை
அவருடைய பணி பாராட்டுக்கு உரியது. இப்பொழுது, சிறந்த பின்னூட்டத்திற்குப் பரிசு அளிப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
பரிசுப்பொருளா முக்கியம்? பரிசு பெற்றோம் எனும் உணர்வுதானே முக்கியம்!
பரிசுகள் நம்மை ஊக்குவிக்கின்றன!
நான்கூட, "வேதிப்பொறியிய"லைப் படிக்க முயன்றேன்;முடியவில்லை;விட்டுவிட்டேன்.
வெட்டிப்பயலின்(பாலாஜி மனோஹர்)கணினிக் கட்டுரைகளை ஆரம்பத்தில் ஆவலுடன் படித்தேன்.....டித்தேன்....த்தேன்.....தேன்....ன்...ம்ஹூம்.
பரிசுகள் அளித்திருந்தால் தொடர்ந்திருப்பேனோ?
சிறந்த பின்னூட்ட அதிர்ஷ்டசாலி யார்....?
ஒவ்வொரு வார முடிவிலும் தெரியவரும்.
அதுவரையில்..............
போட்டியில் பங்கேற்போமே!

(திருமதி துளசி கோபாலும், நானும் போட்டியாளர்கள் அல்லர்)

7 comments:

said...

//(திருமதி துளசி கோபாலும், நானும் போட்டியாளர்கள் அல்லர்//

இப்படிக் கவுத்திட்டீங்களே:-))))))

மாறுவேஷத்தில் வந்து வாங்கிக்கவா? :-)))

said...

ஹா ஹா ஹா

said...

நடுவர்கள் போட்டியிடக்கூடாது னு நீங்கதனே சொன்னீங்க

said...

1. குறிப்பிட்ட வாரத்தில் இடப்பட்ட எல்லா பின்னூட்டங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா? முதலில் நான், அந்த வாரம் பதியப்பட்ட பதிவுகளின் பின்னூட்டம் மட்டும் புரிந்திருந்தேன். அப்படி இல்லாமல் எந்தப் பதிவுக்கும் (எகனாமிக்ஸ் என்ற தலைப்புடன்), அந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்வோம். சரியா?

2. கவிதா கெஜானன் மின்னஞ்சல் மூலமாக சில குறிப்புகளை அனுப்பி பின்னூட்டமாக சேர்க்கச் சொல்லியிருந்தார். அதில் ஆட்சேபணை எதுவும் இல்லையே!

அன்புடன்,

மா சிவகுமார்

said...

1.சரி
2.சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.தொலைபேசி பின்னூட்டத்திற்கு அனுமதி இல்லை

said...

நன்றி ஐயா! துளசி அக்காவும் அதைத்தான் சொல்லியிருந்தார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

நன்றி சிவகுமார். அப்படியே செய்வோம்