Friday, December 29, 2006

வலைப்பதிவர் ரகசிய சந்திப்பு-சென்னை

இது ஒரு மீள்பதிவு

நேற்று (சனிக்கிழமை 23/12/06) மாலை! சென்னை கதீட்ரல் சாலை. தோப்புக்குள்ளிருக்கும், புகழ்பெற்ற "ட்ரைவ் இன்".சிற்றுண்டிக்காகக் காத்திருந்தேன். பின்புறமிருந்து பழகிய சில குரல்கள்! மெல்லத் திரும்பினேன்.



அங்கே,


பறந்து வந்திருக்கும் ட்டீச்சர்

வலைப்பூவர்கள் விபரம் திரட்டியவர்,

நிர்மலமானவர்,

திருமகள்,

'மீன்'மீது 'பிரிய'மானவர்

யானைத்தோழி

நாற்றிசையும் புகழ்மணக்கும் இணையதள வார இதழின் 'அரு'மையான ஆசிரியை.


மற்றும் சிலர் சீரியஸாக விவாதிப்பதைப் பார்த்தேன்!'

பீட்டா ப்ளாக்கர்', '33% இடஒதுக்கீடு', 'வலைதள முன்னேற்றம்' போன்ற சொற்கள் காதில் விழுந்தன. சுற்றுச்சூழ்நிலையையும் மறந்து
அப்படிஎன்னதான் பேசியிருப்பார்கள்?????

13 comments:

said...

இன்னுமா உங்களுக்கு விடை கிடைக்கலை, சிவஞானம்ஜி!
:))

said...

முதல் மகளிர் ரகசிய வலைபதிவர் மாநாடா....பேஷ் பேஷ் வாழ்த்துக்கள்.

தாய்க்குலம் யாரும் மூச்சே விடலியேப்பா....அப்படி என்னதான் ரகசியமா பேசினாங்களோ!

said...

அருமையான செய்தியை இப்படி கிசுகிசு பாணியில் வெளியிடுகிறீர்களே?

:-))))

said...

பாத்துசார் இட்லிவடை ரேஞ்சுக்கு உங்களை உள்ளே தள்ளிட போறாங்க. "வலைப்பதிவர்களின் சந்திப்பில் சில புல்லுருவிகள்" என கவிதைகள் வந்தாலும் வரும்....)

said...

SK சொல்வது:

//இன்னுமா...விடை கிடைக்கவில்லை?//

வாங்க எஸ்கே, வருகைக்கு நன்றி!
முதல் விஜயம்;மகிழ்ச்சி!
புத்தாண்டு வாழ்த்துகள்!

விடை...?
'ரகசியம்....பரம ரகசியம்.....!

said...

பங்காளி அவர்களே

முதல் முறை வருகைக்கு நன்றி!
புத்தாண்டு வாழ்த்துகள்!

/என்னதான் ரகசியமா பேசினாங்களோ/

'அட அது உனக்கும் தெரியலெ
எனக்கும் புரியலெ
ஊருக்கும் தெரியலைடி-சிங்கி
ஊருக்கும் தெரியலைடி...'

said...

சிந்தாநதி அவர்களே முதல் வருகைக்கு நன்றி
புத்தாண்டு வாழ்த்துகள்!

//கிசு கிசு பாணியில்....//

'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன்- அதை
ஒருவருக்கும் ஒருவருக்கும்
சொல்லிவிடாதே..'

said...

கால்கரி சிவா அவர்களே

நம் இல்லத்திற்கு முதல்முறை வருகை தந்தமைக்கு நன்றி!
புத்தாண்டு வாழ்த்துகள்!

//உள்ளே தள்ளிவிடப் போறாங்க..//

'பத்துத்திங்கள் சிறையில் இருந்தேன்
பள்ளிக்கூட அறையில் இருந்தேன்..னு
பாடிட்டேப் போகவேண்டியதுதான்..

said...

அந்த மாநாடு மூலமாக வலை பதிய வந்தேன்... அதுவே அந்த மாநாட்டின் சிறப்பு....

said...

meenapriyaa சொல்வது:

//அந்த மாநாடு.......சிறப்பு//

வாங்க வாங்க! வருகைக்கு நன்றி!

ஓ! அந்த "மீன்"மீது "ப்ரிய"மானவர் நீங்கதானா? மகிழ்ச்சி!

மாநாட்டு விவாதங்களை எப்போ
பதிவிடுவீங்க?

said...

மிக தாமதமாக இந்த பதிவை
மீனாகுமாரியின் பதிவிலிருந்து
பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.
அந்த சந்திப்பு வெறும் அறிமுக கூட்டமே அதில் ரகசியம் ஒன்றும்
இல்லை.:)

said...

LAKSHMI said......

thank u for yr visit
introduction is incomplete?
u refferred to meenapriyaa as meenakumari

said...

:)) மீனா என்றே அழைத்துபேசியதால்
தவறாக எழுதிவிட்டேன்.