Wednesday, October 18, 2006

ஒப்பீட்டுக் கிரயக் கோட்பாடு

மா.சிவகுமாரின் இன்றைய பொருளியல் கட்டுரையின் பின்னூட்டத்தில் பொன்ஸ் ஓரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவருடைய பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம் போட்டால் அது சிவகுமாரின் பதிவைவிடப் பெரிதாக உள்ளது. எனவே தனிப்பதிவாகவேப் பதிந்துள்ளேன்
ஒப்பீட்டுக்கிரயக் கோட்பாடு(தராதரச்செலவுக் கோட்பாடு).எழுதியவர், டேவிட் ரிக்கார்டோ (comparitive costs doctrine or theory by David Riccardo) காலம் 18 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள்
அனுமானங்கள்(Assumptions)1-உற்பத்திக்காரணி உழைப்பு( labour) மட்டுமே, 2-இரண்டே நாடுகள்; இரண்டு பொருட்கள் மட்டுமே உற்பத்தி ஆகும். 3-உழைப்பின் இடப்பெயர்ச்சிமீது தடை ஏதுமில்லை.4-சந்தையில் நிறைவு(பரிபூரண)ப்போட்டி நிலவுகின்றது.5-அரசு பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை(laissez faire)6-எடுத்துச்செல்லும் செலவு(transport costs)இல்லை 7-நீண்டகாலத்திற்கு மட்டுமே பொருந்தும்
எடுத்துக்காட்டு; இரண்டு நாடுகள்- கனவு நாடு & கற்பனை நாடு- உள்ளன. அவற்றில் இரு பொருள்கள் A & B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாட்டில் 100 தொழிலாளர்களைக் கொண்டு 100 A அல்லது 80 B உற்பத்தி செய்ய முடியும். கற்பனை நாட்டில் 100 தொழிலாளர்களைக்கொண்டு 80 A அல்லது 60 B உற்பத்தி செய்ய முடியும் கனவுநாடு A&B உற்பத்தியிலும் அனுகூல நிலையில்( advantageous position) உள்ளது; கற்பனை நாடு பிரதிகூல நிலையில் உள்ளது இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளுக்கும் ஆகும் உற்பத்திச்செலவை ஒப்பிட்டால் கனவுநாடு A உற்பத்தியிலும் , கற்பனைநாடு B உற்பத்தியிலும் அனுகூல நிலையில் உள்ளது தெளிவாகும். எனவே கனவுநாடு A பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும்; கற்பனைநாடு B பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும் இதனால் மொத்த உற்பத்தி பெருகும்;விலை குறையும்;சிறப்புத்தேர்ச்சி ஏற்படும்
18 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரச் சூழ்நிலை மாறிவிட்டது; அனுமானங்களும் தவறானவை. எனவே இக்கோட்பாட்டை மறுத்து புதிய கோட்பாடுகள் உருவாகி உள்ளன. இருப்பினும் இக்கோட்பாட்டின் அடிப்படைக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்

6 comments:

said...

சிவஞானம் ஐயா,
நீங்கள் சொல்லி இருப்பது சிவகுமார் பதிவில் சொல்லி இருக்கும் அதே விவரங்கள் தானே?

இறுதியில் //நடைமுறையில் உலகமயமாக்கலுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்? // என்ற கேள்விக்குத் தான் நான் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?

நீங்கள் பதிவெழுதும் போது எங்கோ எழுதி வெட்டி ஒட்டுகிறீர்கள் என்று தோன்றுகிறது. compose mode-இல் போடாமல், HTML mode - இல் போட்டுப் பாருங்களேன். நீங்கள் கொடுக்கும் ஸ்பேஸ்களும், பத்தி பிரித்தலும் அப்படியே தட்டச்சிய வண்ணமே வர அது தான் வழி..

said...

தலை சுத்துது:-))))

said...

வருகைக்கு நன்றி பொன்ஸ் சண்டியரையும் சித்திரக்குள்ளனையும் சமநிலையில் வைத்து போட்டியிடச்செய்வதை யார்தான் ஆதரிப்பார்?

//நீங்கள் பதிவு....அதுதான் வழி//
அய்யோ தலை சுத்துது...இதெல்லாம்
எனக்குத் தெரியாது;புரியாது;வுட்றுங்க சாமியோவ்

said...

வருகைக்கு நன்றி துளசி

//தலை சுத்துது.....//

உலகமே சுத்துது....தலை சுத்துனா
பரவாயில்லே

said...

வகுப்பறைக்கே கொண்டு சென்று விடுகிறீர்கள் ஐயா! :-)

பொன்ஸ் சொன்ன அயல்நாட்டு வர்த்தகத்துக்கான எதிர்ப்புகளைப் பற்றி அடுத்தப் பதிவில் எழுதியுள்ளேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

மா.சிவகுமார் சொல்வது:

//வகுப்பறைக்கே........//

இதற்கே பாராட்டா?!
எனில் உங்கள் சேவையைப் பாராட்டப் போதுமான சொற்கள்
என்னிடம் இல்லையே!