(நிறைவுப்)போட்டி, சர்வாதீனம் (Perfect competition & Monopoly)-- இவையிரண்டில் எது சிறந்தது எனில், நிச்சயமாக போட்டிதான் சிறந்தது. போட்டிச்சந்தையில் விற்போரும் வாங்குவோரும் பலர்; சுய ஆதாயம் கருதி விலையைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது; ஓரியல்பான பொருட்கள்(homogeneous products);நியாயமான விலை('bon prix');ஒரே விலை;உற்பத்தியும் அதிகம்;காரணிகளுக்கு வேலைவாய்ப்பும் அதிகம்.
சர்வாதீனனுக்கு போட்டி இல்லை. அமிதலாபம்(Supernormal or abnormal profit) ஈட்டுவதே அவன் நோக்கம். எப்படி? 1)தனது பொருளுக்கு உயர்ந்தபட்ச விலை விதிக்கலாம். ஆனால் இது பொதுமக்களால் தாங்கக்கூடிய விலையாக இருக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வருமான வரம்பிற்குள் இருக்கவேண்டும். இல்லாவிடில் வாங்குவது குறையும்;விற்பனை குறையும். 2)சர்வாதீனன் மற்றொரு உத்தியைப்பின்பற்றலாம். உற்பத்தியைக் குறைத்து விட்டால் பொருளுக்குத் தட்டுப்பாடு (பற்றாக்குறை) ஏற்படும். மக்களே போட்டிபோட்டு விலையை உயர்த்தி விடுவார்கள்.இம்முறைதான் சர்வாதீனனுக்கு அனுகூலமானது
போட்டிவிலையைக் காட்டிலும் சர்வாதீன விலை அதிகம்;போட்டி உற்பத்தியைக்காட்டிலும் சர்வாதீன உற்பத்தி குறைவு. எனவே போட்டியே சிறந்தது. ஆனால் நிறைவுப்போட்டி எங்கே உள்ளது? பாடநூல்களிலும் வகுப்பறைவிவாதங்களிலும் மட்டுமே உள்ளது.
அரசு(சமூக)ச் சர்வாதீனத்தால் (State or Social Monopoly) பொதுநலம் அதிகரிக்கும்;பெருவாரியான மக்களுக்கு பயன் கிட்டும். தனியார் சர்வாதீனத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் (குறைவான உற்பத்தி, அதிகவிலை, விலை பேதங்காட்டுதல்,வேலைவாய்ப்பு குறைதல்...........)
அரசுச்சர்வாதீனம் எப்பொழுது ஏற்படுகின்றது? சிலவற்றை தனியார்துறையில் விடுவது நாட்டுநலனுக்கு ஆபத்து (இராணுவம், போலீஸ், நீதித்துறை);சில தொழில்களில் தேவையான அளவிற்கு முதலீடு செய்ய தனியாரால் முடியாது (இந்திய ரயில்வே);சிலவற்றை நிர்வகிக்கத் தனியாரால் முடியாது (இரயில்வே,அஞ்சல்& தந்தி); சிலவற்றில் ஈடுபட தனியார் துறை முன்வராது ( வாடிகால், கழிவுநீர் வெளியேற்றம்)சில துறைகளால் தனியாருக்கு லாபமில்லை( குடிநீர், பூங்கா) இவைபோன்ற சமூகச்சர்வாதீனங்களால் சமூகநலன் அதிகரிக்கும். அவை நிரந்தரமானவை. நிர்வாகப் புல்லுருவிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளை ஒழித்துவிட்டால் சமூகச்சர்வாதீனமே சிறந்தது
தனியார் சர்வாதீனம் காலப்போக்கில் மறையும்; அல்லது கட்டுப்படுத்தப்படும
Thursday, October 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உண்மை தான் சிஜி. சமூகச் சர்வாதீனங்கள் தான் சிறந்தவை. ஆனால், அவை அரசு சார்ந்ததாகத் தான் இருக்க வேண்டுமென்று என்ன அவசியம்?
உதாரணத்துக்கு, ஒரு பத்து வீடுகளுக்குப் பொதுவாக இருக்கும் பூங்காவைப் பராமரிப்பது அந்தப் பத்து வீடுகளின் பொறுப்பே அல்லவா? அப்படி சின்னச் சின்ன சமூகக் குழுக்கள் பூங்கா மாதிரி விஷயங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டால், அரசின் தலையீடும் தேவையில்லாமல் போய்விடுமல்லவா?
(மடிப்பாக்கத்தில் நாங்கள் இருந்த பகுதியில் இது போல் செய்து வந்தோம், கொஞ்ச நாட்களுக்கு, இப்போது அந்தப் பூங்கா மீண்டும் காடாகிவிட்டது! :( )
வாடிகால் = வடிகால்.
வருகைக்கு நன்றி,பொன்ஸ்!
அனைவரும் சமூகப் பொறுப்புள்ளவர்கள் எனில் அரசு தலையிட வேண்டியதில்லை
சிங்கப்பூரில் சுத்தம் சுகாதார விதிகளைப் பின்பற்றும் மக்கள்ஸ்
மீனம்பாக்கத்தில் இறங்கியதும் ரோட்டில் புளிச் என்று துப்புகின்றனரே
இங்கே அரசு தலையிட வில்லை எனில் பூங்கா எல்லாம் காடாக மட்டுமா ஆகும்?
வருகைக்கு நன்றி ட்டீச்சர்
வடிகால்
வடிகால்
வடிகால்
வடிகால்
வடிகால்
இம்பொஸீஸன் எழுதிட்டேன்
ஐயா, என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. கடைசி பேட்டி பற்றி கேட்டிருந்தீர்கள். மிக்க நன்றி. அவசியம் வெளியிடுகிறேன். யாராவது கேட்கிறார்களா என்றே காத்திருந்தேன். நன்றி.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி மோகன்!
நிர்வாகப் புல்லுருவிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளை ஒழித்துவிட்டால் //
இதுதான் ஜி பிரச்சினையே..
பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுபோலத்தான்..
ட்டி.பி.ஆர்.ஜோஸப் சொல்வது:
//பூனைக்கு மணி யார் கட்டுவது...//
வாங்க ஜோஸப், வருகைக்கு நன்றி!
பூனைக்கு மணி யார் கட்டுவது என்பதை பூனையே நிர்ணயிப்பதுதான்
இப்பொழுது பிரச்சினை....
Post a Comment