Thursday, July 06, 2006

வ.வா.சங்கம் தேடும் பாடல்-2

"மந்திரி குமாரி"யில் இடம் பெற்றுள்ள எருமைக்கன்னுக்குட்டி பாடலைப் பாடியவர் திருமதி எம். எல். வசந்தகுமாரி
எனவே இது திரு ட்டி.எம்.சவுந்தர ராஜனின் முதல் பாடல் அன்று
வ.வா சங்கப்பதிவிற்கான என் பின்னூட்டத்தில்
"ஒரு வேளை இது கலைஞர் எழுதியப் பாடலாகவும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது உறுதி செய்யப் படவில்லை
கேஸட்டில் lyrics: a.marudhakaasi & kaa.mu.sheriff என்றே குறிபிடப் பட்டு உள்ளது

6 comments:

said...

மாஸ்டர் சுப்பையாவிற்கு குரல் கொடுத்தது எம்.எல்.வசந்தகுமாரி அவர்களா? இதுவும் புது தகவல் தான் சார்.

said...

ஆமாங்க கைப்புள்ளே
அந்தப் படத்தில் டி,எம்.எஸ்,
"அண்ணம் இட்ட வீட்டிலே
கண்ணக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய்ப் போக நேருமே"
என்ற பாடலைத்தான் பாடினார்

said...

அண்ணம் இட்ட வீட்டிலே
கண்ணக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய்ப் போக நேருமே"
என்ற பாடலைத்தான் பாடினார் //

அடடடடா..

எவ்வளவு முக்கியமான தகவல் பாருங்க.. ஒங்களுக்கு தகவல் தலைவான்னு பட்டம் சூட்டிரலாம்னு வருத்தப்படும் பெரியவர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானித்திருக்கிறது..

என்ன தருமி, டோண்டு சார்..

இந்த சங்கத்துல துளசிய சேக்க முடியாதுல்லே.. அதான் விட்டுட்டேன்.

said...

வாங்க ஜோஸப்
அதென்ன
வருத்தப்படும் பெரியவர்கள் சங்கம்?வருத்தமில்லா முதிர் இளைஞர் சங்கம்
அல்லது வருத்தமில்லா இளங்கிழவர்
சங்கம் னு வையுங்க
டிஎம்.எஸ் பாட்டு அப்போ பிரபலம். திருடு போன வீட்டு பக்கத்திலே நின்னு
இந்த பாட்டை பாடிப்பார்த்தால் அதன் பெருமை நம் முதுகில் தெரியும்

said...

வருத்தமில்லா முதிர் இளைஞர் சங்கம்
அல்லது வருத்தமில்லா இளங்கிழவர்
சங்கம் னு வையுங்க//

ஏங்க, வாலிபர்கள் வருத்தப்படாம ஜாலியா இருக்கணும்னா வயதானவர்கள் வருத்தப்பட்டுத்தானே ஆகணும். அதானங்க யதார்த்தம்..

அது சரி.. அதென்ன இளங்கிழவர்கள்..

கிழவர்கள்ல இளசு பெருசுன்னு இருக்கா என்ன?

said...

ஆயுளை 7 பருவங்களகப் பிரிப்பது
வழக்க மில்லையா?
ஒருவர் மகிழ்ச்சி யடைய மற்றவர் ஏன் வருத்திகொள்ளவேண்டும்? எல்லோரும் மகிழும் நிலை வரும் வகையில் இவ்வுலகம் முன்னேறும்