Thursday, July 27, 2006

"கள்ளிப்பால் குடிச்சு...."

சந்தோஷின் சமையல் ஆராய்ச்சி பற்றி குறிப்பிடுகையில்,"சீக்கிரமா சமைக்கக் கத்துக்கங்க; இல்லாட்டி உங்களுக்கெல்லாம் கல்யாணமுன்னு ஒண்ணு நடக்குறது கஷ்டம்தான்"னு துளசி எச்சரிக்கை விட்டாங்க.
சமையல் செய்ய கற்றுக் கொண்டாலும் கூட,கல்யாணம் நடப்பது கஷ்டம்தான்னு புள்ளிவிபரம் கூறுது. கள்ளிப்பால்,விதைநெல் புண்ணியத்தால் பால்விகிதம்(sexratio) குறைந்து வருகின்றது.
கடந்த நூறாண்டுகளில், தமிழ்நாட்டில் ஆண்:பெண் விகிதம் குறைந்து வருவதை கீழ்க்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன:
1901 ல் 1000:1044
1911 ல் 1000:1042
1921 ல் 1000:1029
1931 ல் 1000:1027
1941 ல் 1000:1011
1951 ல் 1000:1007
1961 ல் 1000:992
1971 ல் 1000:978
1981 ல் 1000:977
1991 ல் 1000:974
2001 ல் 1000:986(quick estimate)

2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்:பெண் விகிதம் 1000:933.

மொத்த மக்கட்தொகையில் ஆண்களை விட
பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைவிட 0-6 வயது பிரிவினரில் இவ்விகிதம்
இன்னும் குறைவாக இருப்பதுதான் அச்சுறுத்துகின்ற்து. 2001 சென்ஸஸ்படி,தமிழ்நாட்டில் 0-6 வயது பிரிவில்
ஆண்பெண் விகிதம் 1000:942 ஆகும்(இந்தியாவில்
இவ்விகிதம், 1000:927).இவ்வயதுப் பிரிவில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணம் கள்ளிப்பாலா அல்லது விதைநெல்லா அல்லது வேறா?
சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலுங்கூட,
ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இல்லாவிட்டால்,"கல்யாணம்னு ஒண்ணு நடப்பது
கஷ்டம்"தானே?

10 comments:

said...

புள்ளி விவரமெல்லாம் எடுத்து விட்டுக்கிட்டு இருக்கீங்க?
ஓஓஓஓஓ பொருளாதாரப் பேராசிரியர் ஆச்சே!

இப்போப் புரியுது, ஏன் இது மாதிரி எழுதறது சுலபமா இருக்குங்கறது:-)))))

பசங்களுக்குச் சொல்லி வைக்கணும். சமையல் மட்டுமில்லை, இன்னும் மத்த வீட்டு வேலைகளையும்
நறுவிசாப் பண்ணக் கத்துக்குங்கன்னு.

said...

நல்வரவு துளசி அவர்களே.நன்றி
இப்பிரச்சினை பற்றி ஒரு விவாதத்தை ஆரம்பித்து வையுங்களேன்

said...

மால்துஸ் தியரியைப் பற்றி எழுதுங்களேன். நான் சமீபத்தில் 1962-ஆம் ஆண்டில் புதுக் கல்லூரியில் பி.யூ.சி. படிக்கையில் இது பற்றி படித்துள்ளேன். ரொம்பத் தேவையான விஷயங்களை உள்ளடக்கியது இந்தக் கோட்பாடு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

போற போக்குல பொம்பளைங்களக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்குப் போட்டோ போட்டி நடக்கும் போல.

இப்பிடி இருக்குமோ...மக்கள் தொகையைக் குறைக்க இயற்கையே பெண்களின் பிறப்பு எண்ணிக்கையைப் பல வழிகள்ள குறைச்சு...அதுனால பிள்ளைப் பிறப்பும் கொறஞ்சு போயிரும்..அப்ப ஆம்பளைங்க எல்லாம் என்ன பண்றது? வேற வழியே இல்லாம ஆம்பளைங்களையே கலியாணம் பண்ணிக்கிருவாங்க...ஆனாலும் கொழந்த பொறக்காதுல்ல...அப்படியே கொஞ்ச காலம் கழிச்சி மக்கள் தொகை கணிசமாக் கொறஞ்சிரும். எப்படி என்னோட கற்பனை!

said...

இனி பாண்டவர் பூமிதானா ?

said...

நல்வரவு டோண்டு அவர்களே.நன்றி
மால்தசை அழைப்போம்; மக்களுக்குப்
பிடிக்குமா?

said...

நல்வரவு ராகவன்.நன்றி
ஒட்டுமொத்தமாக உங்கள் கற்பனையைப் புறக்கணிக்கமுடியாதே!
இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டதே,சில நாடுகளில்!

said...

நல்வரவு மணியன்.நன்றி.
இந்தியாவின் சில இடங்கள் இப்பொழுதும் "பாண்டவர் பூமி"யாக உள்ளது.

said...

போற போக்குல பொம்பளைங்களக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்குப் போட்டோ போட்டி நடக்கும் போல.//

இப்ப மட்டும் என்ன நடக்குது ராகவன்? இந்த வரதட்சிணைக் கொடுமைக்கு மூலமே இதுதானே? அதுவும் தூத்துக்குடி மாதிரி ஊர்ல கேக்கவே வேணாம்.

ஜி!

துளசி சொல்றா மாதிரி ஒரே புள்ளி விவரமா அள்ளி விடறீங்க?

said...

நல்வரவு ட்டிபிஆர் நன்றி
இப்போ இருக்கிற்நிலை ஆணுக்கு வரதட்சினை--அதாவது ஆணுக்கு நிறைய டிமாண்ட் இருப்பதுபோல.
நான் விவரித்த சூழ்நிலை வளர்ந்தால்
பெண்ணுக்கு வரதட்சிணை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்