Thursday, July 27, 2006

என் பெயரில் போலிப் பதிவுகள்.

என் பெயரில் என் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளும் பின்னூட்டங்களும் இடப்பட்டுள்ளன. இவை எதுவுமே நான் போட்டதில்லை
என் வலைத்தளம் sivagnanamji.blogspt.com. அதில் என் படம் இருக்காது. மாறாக, என் புகைப்படம் கொண்ட sivananamji.blogspot.com எனும் பதிவுகளும்
பின்னூட்டங்களும் போலியானவை. அவற்றால்
பதிவர் எவருக்கேனும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். போலிகளை இனங்கண்டு வெறுத்தொதுக்க வேண்டுகிறேன்.
வலைதளத்தில் கல்வியாளர்கள், கண்ணியமானவர்கள், கணிணி விற்பன்னர்கள் போன்றோர் மட்டுமே இருப்பார்கள் எனும் என்
நம்பிக்கை, தகர்ந்தது.
என் ப்ளாக்கர் எண் 16342789. நான் அதர் ஆப்ஷன் வைத்திருக்கும் பதிவுகளில் பின்னூட்டம்
இடமாட்டேன். அப்படி இட நேர்ந்தால் அல்லது ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் இட நேர்ந்தால்
அப்பின்னூட்ட்த்தின் நகலை நான் அப்போதைக்கு
குறிப்பிடும் என் பதிவுகள் ஒன்றில் பின்னூட்டமாக இடுவேன். அவ்வாறு இடுவதையும் சொல்வேன். அதை சரி செய்து பார்க்காமல் என்
பெயரில் வரும் பின்னூட்டத்தை அனுமதிக்காதீர்கள்.
என் பெயரையும், புகைப்படத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் வலைப்பதிவர் ஏன் இப்படிச் செய்கின்றார் என்பது புரியவில்லை.
என் தலைமுறை தனிமனிதத் தாக்குதலில்
நம்பிக்கை அற்றது; இனவழி உரிமைகளை எச்சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதது.
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பிற்கு எடுத்துக்காட்டாக, கலைஞர்,"சங்கத்தமிழி"ல் குறிப்பிடுவது
பெரியார்-ராஜாஜி நட்பைத்தானே?
அரசியல் வித்தகரும், பொதுவுடைமைக்கட்சியின்(இடது) முன்னோடியுமான தோழர் பி.ராமமூர்த்தியின்
திருமணம் பெரியார் தலைமையில்தானே நடந்தது?
கல்லூரி மாணவனாக, பெரியாரைப் பார்க்கச்
சென்ற பொழுது, அப்பெருமகனார் முதுமைக்காலத்திலும் எழுந்து நின்று வரவேற்றதும்,பின்னர் எழுந்து நின்று வழியனுப்பியதும் என் நெஞ்சை விட்டு நீங்கா
நினைவு ஆகும்.
பிறர் பெயரில் பதிவிடுவோரையெல்லாம்
கணிணி உலகில் ஏற்றிவிடத்தான் இத்தனை ஆண்டுகாலப் போராட்டமா எனும் கசப்பு உணர்வே எழுகின்றது.

10 comments:

said...

ஏற்கனவே பார்த்ததை மறுபடியும் பார்க்கும் உணர்வு. இதுவும் கடந்து போகும். தைரியமாக இருக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஐயா,

தங்கள் குமுறல் மிக நியாயமானது.

என் சமீபத்திய பதிவிலும் தங்கள் பெயரில் போலி பின்னூட்டம் வந்தது. மிகவும் பொருத்தமாக தங்களைப்போன்றே (ஆனால், சாதி குறிப்பிட்டு...) வந்த அந்த பின்னூட்டத்தை நான் நீங்கள் என்றே எண்ணி பதிலும் அளித்தேன். பின்புதான் இது போலி என்று தெரிந்து களைந்தேன். என் பின்னூட்டத்தை எவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை.

இது போல் சோசப் ஐயா பெயரிலும் அதே சமயம் இட்டது அந்த இழி பிறவி.

இதற்கு கலங்காதீர்கள். காய்ந்த மரம்தான் கல்லடி படுகிறது. இணையத்தில் பல வசதிகளும் சுதந்திரங்களும், திறைகளும் இருப்பதால் இம்மாதிரி கயமைத்தன்மையும் இங்கு உலா வருகிறது. அதனால் என்ன. அவை எப்போதுமே நம்மை சிறுமைப்படுத்தாது.

தங்கள் பெயரில் யாரும் தவறாக எண்ண மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி

said...

நல்வரவு டோண்டு அவர்களே. நன்றி

said...

நல்வரவு ஜயராமன் அவர்களே
ஊரில் இல்லாமையால் உங்கள்
பதிவையும் பார்க்கவில்லை;
பின்னூட்டத்தையும் பார்க்கவில்லை;
அதற்கான பதிலையும் பார்க்கவில்லை
வருகைக்கு நன்றி

said...

எல்லாத்துக்கும் போலி உருவாகும் உலகத்துலே சமீபத்திய டிரண்ட் வலை உலகப் போலிகள்.
எனக்கும் அச்சு அசலா நீங்க எழுதுன மாதிரியே ஒரு பின்னூட்டம் வந்து அதுக்கு நானும் பதில்
சொல்லிட்டேன்.

அதுக்கப்புறம் நீங்களா வந்து சொன்ன பிறகுதான் புரிஞ்சது.

இனிமே நாங்க கவனமா இருப்போம். கவலைப்படாதீங்க.

போலி உங்களை மரியாதை செய்யவேணாமுன்னு
நினைச்சு 'g' யை எடுத்துட்டாருபோல:-)))))

said...

நல்வரவு துளசி,நன்றி!

"எங்களால் ஒரு அசலை உருவாக்க முடியாது;
ஆனால்,
ஒரு போலி உருவானால்
அதற்கொரு போலியை உருவாக்க
முடியும்"(அப்துர் ரஹ்மான்)

மரியாதைப்பட்டவர்களுக்குதான்
மரியாதை காட்டத்தெரியும் இல்லையா?

said...

பிறர் பெயரில் பதிவிடுவோரையெல்லாம்
கணிணி உலகில் ஏற்றிவிடத்தான் இத்தனை ஆண்டுகாலப் போராட்டமா எனும் கசப்பு உணர்வே எழுகின்றது.//

உண்மைதான் ஜி!

விஞ்ஞானத்தின் முன்னேற்றம் இதற்குத்தான் பயன்படுகிறதுபோலும்..

இதுல என்ன வேடிக்கைன்னா இந்த பதிவிலயே என் பேர்ல ஒரு போலி பின்னூட்டம் வந்திருக்கு பாருங்க.

நா இப்பத்தான் பின்னூட்டம் போடறேன். ஆனா எனக்கு நன்றி தெரிவிச்சி நீங்க பதில் பின்னூட்டம் போட்டுருக்கீங்க:)

said...

நன்றி தெரிவிக்கும் பின்னூட்டத்தை
நீங்கள் பார்க்கவேண்டுமென வைத்திருந்தேன்.இப்பொழுது நீக்கிவிட்டேன்

said...

டிபிஆர்ஜோ,

எப்படியும் உங்க பின்னூட்டம் வரத்தானே போகுதுன்ற இமாலய நம்பிக்கை.
இல்லையாங்க சிஜி?:-))))

said...

அன்புள்ள ஐயா,

உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாமல் இங்கு எழுதுகிறேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

பொருளாதாரம் பற்றிய தொடரில் வரும் பின்னூட்டங்களில் ஒவ்வொரு வாரமும் சிறந்த பின்னூட்டத்துக்கு ஒரு புத்தகம் பரிசாகக் கொடுப்பதாக எண்ணம். என்னிடம், நான் படித்த எனக்குப் பிடித்த புத்தகங்களை கொடுக்கிறேன். மொத்தம் ஏழு, இன்னும் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியில் பெரும்பரிசாக தொடர் முடிந்ததும் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் என்ற புத்தகத்தை மொத்தத்தில் சிறந்த பின்னூட்டம் இட்டவர்களுக்குக் கொடுக்கலாம்.

புத்தகங்களின் பெயர்கள்
1. ஆர் கே நாராயணனின் Waiting for Mahatma (novel)
2. லூயி ஃபிஷரின் Mahatma Gandhi (Biography)
3. காந்தியின் Society, social service and reforms 1 (collection of writings)
4. காந்தியின் Society, social service and reforms 2 (collection of writings)
5. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (detective stories)
6. அண்ணாவின் சொற்பொழிவுகள்
7. ஆதம் ஸ்மித்தின் The Wealth of Nations (One of the greatest Books)

இதற்கு நீங்களும் , துளசி கோபாலும் பரிந்துரை செய்யக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் நூற்றுக்கு இத்தனை என்று மதிப்பெண் இருவரும் தனித்தனியே கொடுத்து கடைசியில் எதற்கு கூட்டுத் தொகை மிக அதிகமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வேறு ஏதாவது முறை இருந்தாலும் சொல்லுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்
--