Friday, July 14, 2006

நெல்லையால் தொல்லையா?

"மதுபாலா,திவ்யாபாரதி,மணிஷா,த்ரிஷா,ஜோதிகா என பலபேர் காலடி பட்ட புண்ணியமண்"(அம்பி) நெல்லையில் ஆகஸ்ட்டில் நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு,அம்பி அறைகூவி அழைப்பு விடுத்துள்ளார். வாழ்க!
சென்னையிலும் ஒரு மாநாடு நடைபெறுமென்றும்,அதன் பொறுப்பை சுபா கவனித்துக் கொள்வார் என்றும் அம்பி அறிவித்துள்ளார்
சென்னையில் டோண்டு,ட்டிபிஆர் ஜோஸப் முயற்சியில் இரு சந்திப்புகள்-மே 29 மற்றும் ஜூலை 2 ஆகிய நாட்களில்- நிகழ்ந்துள்ளன. அடுத்த சந்திப்பிற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன
இந்நிலையில்,சென்னையில், வலைப்பதிவர் சந்திப்பிற்கான எற்பாட்டை சுபா கவனித்துக் கொள்வார் எனும் அறிவிப்பு ஏன்?
டுபுக்கு அவர்களுக்கு இவ்விபரம் தெரியுமா?
கீரைக் கடைக்கும் எதிர்க்கடையா?
(பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், விரவாஞ்சி,பாரதி போன்றோரின் ஆன்மா என்னை
மன்னிக்கட்டும். நெல்லை நண்பர்கள் கோபிக்கவேண்டாம்;நெல்லையின் சிறப்பாக அம்பி குறிப்பிட்டதைத்தான் முதல் இரு வரிகளில் மீள்பதிவு செய்தேன்)

13 comments:

said...

சுபா அவர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்பிற்கும் போனால் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நல்வரவு டோண்டு அவர்களே
ஏன் ஒரே ஊரில் 2 வலைப்பதிவர் குழு?
"ஒண்ணாயிருக்கக் கத்துக்கனும்-இந்த
உண்மயச் சொண்ணா ஒத்துக்கனும்"

said...

சிவஞானம்ஜி சார்!
இந்த பதிவை எதற்க்காக தாங்கள் போட்டு உள்ளீர்கள் என்று தெரியவில்லை. வலைப்பதிவாளர்கள் தனியாக சந்திக்க கூடாதா? டோண்டு சார் ஏற்பாடு செய்யும் சந்திப்பில் மட்டும் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஏதுவும் கட்டாயம் உள்ளதா? அது அவர் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு மற்றும் சுகந்திரம். நீங்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

நீங்கள் அம்பி பிற பதிவுகளை படித்து உள்ளீர்களா, அல்லது சுபா அவர்களின் பதிவை படித்து உள்ளீர்களா. அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பதிவு எழுதுபவர்கள். அவர்கள் நண்பர் வட்டத்தில் உள்ளவர்களளும் பெரும்பாலும் ஆங்கிலத்திலும், தங்கில்ஷ்சிலும் எழுதுபவர்கள். அவர்கள் ஏன் தமிழ்மணம் பதிவர்கள் கூடும் கூட்டத்திற்கு வர வேண்டும். அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதே தெரியாது.

திரு டுபுக்கு அவர்களுக்கு இது தெரியுமா என்று வேறு கேட்டு உள்ளீர்கள். திரு டுபுக்கு அவர்கள் தான் நெல்லைக்கு வாருங்கள் என்று அவர் பதிவில் அழைப்பு விட்டு இருந்தார். அம்பி அதை கிண்டல் செய்யும் நோக்கமுடன் தான் இந்த பதிவை போட்டார். நீங்கள் சொல்லுவது போல கீரைக் கடைக்கு எதிர்கடை போட வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் இல்லை.

அப்படியே எதிர்கடை போட்டாலும் தவறா என்ன?

said...

//"ஒண்ணாயிருக்கக் கத்துக்கனும்-இந்த
உண்மயச் சொண்ணா ஒத்துக்கனும்" //
ஒரு அமைப்பு ஏற்படுத்துங்கள். அதன் பிறகு இது போன்று நடந்தால் தவறு என்று சொல்லாம்.

said...

நல்வரவு நாகை சிவா அவர்களே!
உங்கள் பின்னூட்டங்கள்லிருந்து புதிய
விபரங்களை அறிந்து கொண்டேன்.அதற்காக மீண்டும் நன்றி!இருக்கின்ற ஒன்றை விரிவு படுத்தலாமே எனும் கருத்தில்தான் இப்பதிவை இட்டேன்.மற்றபடி டோண்டு கூட்டும் கூட்டத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறுவதற்காக
அல்ல."ஊர் கூடித் தேர் இழுப்போம்"
என்பதே என் கருத்து
மீண்டும் நன்றி!

said...

Dear Mr Naagai Siva i read only BlogDesam. Hence i am not aware of their contributions. O.K?

said...

அடடடடடா!

யார் கூட்டுனாலும் அங்க போயிரவேண்டியதுதான்.

என்ன சொல்றீங்க ஜி!

ஆனா ஒன்னு சுபா, நாகை சிவா சொல்றா மாதிரி ஆங்கில வலைஞர்களை மட்டும் கருத்தில்கொண்டு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் நமக்கு அழைப்பு வர வாய்ப்பில்லை.

அவர்களுடைய கூட்டத்துக்கு ஒரு வாழ்த்து வேண்டுமானால் அனுப்பலாம்.

said...

நல்வரவு ஜொஸப் அவர்களே!
நிச்சயம் செல்வோம்

said...

புரிந்து கொண்டமைக்கு நன்றி சிவஞானம்ஜி.


//நாகை சிவா சொல்றா மாதிரி ஆங்கில வலைஞர்களை மட்டும் கருத்தில்கொண்டு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் //
ஜோசப் சார், அப்படி ஒரு கூட்டமே ஏற்பாடு செய்யப்படவில்லை. அங்கு அது ஒரு கிண்டலுக்காக சொல்லப்பட்ட விசயம். நான் இந்தியா வரும் போது நீங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன். பெங்களுரை விட சிறப்பாக கலக்கிடனும்.

said...

அன்பின் சிவஞானம்ஜி,
இன்றைக்கு வலைப்பதியும் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது.இதில் வலைபதியும் உலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும்,எல்லாரையும் தெரிந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. இதில் திரு.டோண்டு மற்றும் திரு.ஜோசப் செய்யும் ஏற்பாடுகளைப் பற்றி அம்பிக்கு தெரியாமலிருக்கும் சாத்தியங்கள் இருக்கலாம் அல்லவா? மேலும் அப்படியே தெரிந்திருந்தாலும் அவர் சொன்னதில் ஏதும் தப்பிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாகை சிவா சொன்னது மாதிரி வலைப்பதிவர் சந்திப்பு நடத்துவது என்பது அவரவர் சௌகரியங்களைப் பொறுத்தது. இன்னார் தான் நடத்தலாம் என்பதெல்லாம் இல்லை. அவர் சுபா நட்த்துவார் என்று சொன்னது எந்த உள்ளர்த்ததிலும் இல்லை. அப்படிப் பார்த்தால் இதற்கு முன்னால் நிறைய வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. உங்களுக்குத் தெரியுமா? ஆர்வங்கள், நட்பு வட்டங்கள், கலந்து கொள்பவர் விருப்பங்களைப் பொருத்து ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்பும் வித்தியாசப்படும். அது தான் ஆராக்கியமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தயவு செய்து இதை குற்றக்கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள்.


//பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், விரவாஞ்சி,பாரதி போன்றோரின் ஆன்மா என்னை
மன்னிக்கட்டும். நெல்லை நண்பர்கள் கோபிக்கவேண்டாம்;நெல்லையின் சிறப்பாக அம்பி குறிப்பிட்டதைத்தான் முதல் இரு வரிகளில் மீள்பதிவு செய்தேன்//

-இதை அம்பி என்னுடைய ஒரு முந்தைய பதிவிலிருந்து கிண்டலடித்துப் போட்டுள்ளார். இது நக்கல் தொனியில் எழுதப்பட்ட ஒன்று. இதுவரை எந்த நெல்லை நண்பர்களும் கோவிக்கவில்லை.

திரு.ஜோசப் - //ஆனா ஒன்னு சுபா, நாகை சிவா சொல்றா மாதிரி ஆங்கில வலைஞர்களை மட்டும் கருத்தில்கொண்டு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் நமக்கு அழைப்பு வர வாய்ப்பில்லை.//
எந்த வலப்பதிவர் சந்திப்பும் இந்த மொழியில் பதிவர்களுக்கு மட்டும் என்று நடைபெறுவதில்லை. ஆகவே நீங்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் :) மேலும் வலிப்பதிவர் சந்திப்பு என்பது "Open Invitation" யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். லண்டனில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் நான் ஒருவன் மட்டும் தான் தமிழில் வலைப் பதிவர். இருந்தாலும் தமிழோடு பெருமையைப் போய் நிலை நாட்டுவோம்ல :)

said...

மேற்சொன்ன கருத்துக்கள் அம்பி எனடைய கசின் பிரதர் என்றில்லாமல் ஒரு மூன்றாம் மனிதக் கோண்த்திலேயே சொல்லியிருக்கிறேன்.

said...

ஆமாமாம். இங்கே நியூஸி வலைப்பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது. யாரும் வரலைன்னாலும் அது கட்டாயம் நடக்கும். ஒரு ஆள் மட்டும் கலந்துக்கிட்டாலும் நம்மைப் பொறுத்தவரை அது மாநாடுதான்:-)))

அந்த ஒரு ஆள் யாருன்னு தெரிஞ்சதா?:-)))

said...

நல்வரவு dubukku அவர்களே

நல்வரவு நாகை சிவா அவர்களே

நல்வரவு துளசி கோபால் அவர்களே

உங்கள் அனைவரின் கவணத்தை என் பக்கம் திருப்புமளவிலான ஒரு பதிவை இட்டமைக்கு என்னை நானே
பாராட்டிக்கொள்(ல்)கிறேன்