Wednesday, July 12, 2006

"மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க..."

மருத்துவக் கல்லூரி துவங்குவதைத் தவிர்க்க' எனும் தலைப்பிட்டு 'தின மலர்'10/07/06 நாளிதழில் கீழ்வரும் செய்தி வெளியாகி உள்ளது
அரசு டாக்டர் சங்க மாநிலத் தலைவர்,"மருத்துவக்கல்லூரி துவக்க ரூ.200 கோடி செலவாவதைத் தவிர்த்து,ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் ரூ. 20 கோடியில் வசதிகளை செய்தாலே இடங்களை அதிகரித்து கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்"என்று கூறியுள்ளார்.
அரசின் வசம் நிதித்தட்டுப்பாடு இருப்பதால்,ஒரு தற்காலிக ஏற்பாடாக இதைக்கூறுகிறாரா அல்லது நிரந்தரத்தீர்வா என்பது தெரியவில்லை
மக்கள்தொகை அதிகரித்து வருகின்றது;புதுப்புது நோய்களும் தோன்றிவருகின்றன;மக்களிடம் விழிப்புணர்வும் வளர்ந்து வருகின்றது.இந்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுவே பொருத்தமாகும்
மேநிலைக் கல்வி முடித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் எவ்வித உடன்தொடர்பும்(correlation) இல்லை
மாநிலத்தில் இந்த ஆண்டில் 52000 பொறியியல் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகின்றது.(நிர்வாக ஒதுக்கீடு தனி)
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 27050 இடங்கள் உள்ளன.இதில் கவுன்சிலிங் மூலம் 14906 இடங்கள் நிரப்பப்படும்
தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 187 இடங்கள் போக 1458 இடங்கள் மட்டுமே உள்ளன.பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீடு போக 36 இடங்கள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 4000 ஆண்டுக்கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இக்கட்டணம் ரூ.1,30,000 என்று ராமன் கமிட்டி பரிந்துரைத்து உள்ளது
இந்நிலையில் தொலைநோக்குடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுதான் நிரந்தரத் தீர்வு ஆகும்.

12 comments:

said...

இந்நிலையில் தொலைநோக்குடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதுதான் நிரந்தரத் தீர்வு ஆகும்.//

இதுதான் நிரந்தர தீர்வு என்பதில் சந்தேகமேயில்லை..

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 4000 ஆண்டுக்கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது//

இது சரியாங்க? மாச கட்டணமா இருக்கும்.. ஆண்டுக்கு 48000/-. சரியா?

said...

ஒரு பிரச்சினையை முழுமையான தீர்வுடன் அணுகாமல் அப்போதைய தேவையை மட்டும் கருத்தில் கொண்டு தங்கள் உடனடி விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சியாளரின் (not govt., but administrators) இயல்பு தெரிகிறது. நீங்கள் சொல்வதுபோல புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது மாணவர்களுக்கு மட்டுமன்றி அவை பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் நிறுவப் பட்டால் மக்களுக்கும் தீர்வாயிருக்கும்.

said...

புது மருத்துவக்கல்லூரிகள் ஆரம்பிப்பதை விட, ஏற்கனவே உள்ள கல்லூரிகளுக்கு வசதி செய்து கொடுத்தால் அதுவே போதுமானது.

said...

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின்
பேட்டி தினமலர் (11/07/06)நாளிதழில்
வந்துள்ளது.அதில் ரூ. நான்காயிரம் என்று எழுத்தால் குறிப்பிடப் பட்டு உள்ளது
மிக நன்றி ட்டிபிஆர்

said...

நல்வரவு மணியன் நன்றி!

said...

நல்வரவு ஆராதனா நன்றி!
இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில்
கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனும் கருத்து எனக்கு உடன்பாடானதே. அதை நான் ஏற்கின்றேன்.

ஒரு பின் தங்கிய மாவட்டத்தில்
ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்படுமானால், அதிகமானோர்
படிக்கமுடியும் என்பதோடு ,அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி,சமூக விழிப்புணர்வு,வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்றவற்றையும் நாம்
கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?

said...

மக்கள் தொகையைக் கணக்குலே வச்சுக்கிட்டு, கல்லூரியில் சேர ஆர்வம் உள்ள மாணவர்களின்
எண்ணிக்கையையும் பார்த்துக்கிட்டு அதுக்குத் தகுந்த எண்ணிக்கையிலே கல்லூரிகள்
இருக்க வேணும்.

அப்புறம், எனக்கு ஒண்ணு புரியலைங்க. எதுக்கெடுத்தாலும் கவுன்ஸிலிங் ன்னு சொல்றாங்களே.
அப்ப என்ன படிக்கலாம்ன்னு தேர்வு செய்ய மாணவர்கள் கையில் இல்லையா?

நிஜமாவே புரியலை. கொஞ்சம் சொல்லுங்க.

said...

நல்வரவு துளசி,நன்றி!

கட் ஆப் மார்க் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.
போர்டில் எந்தக்கலூரியில் எந்தபாடத்தில் எத்தனை இடம் உள்ளது
போன்ற விபரங்கள் இருக்கும்.மாணவர் தனக்குப்பிடித்த பாடத்தையும் கல்லூரியையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.ஒருவேளை அந்தப்பாடத்தில் இடம் இல்லையெனில்.இடமுள்ள மற்றொரு பாடத்தை அல்லது மற்றொரு கல்லுரியைத் தேர்வு செய்யலாம்-இது
அரசு இடங்களுக்கான கவுன்சிலிங்....
நிர்வாகத்தின் இடங்களுக்கான கவுன்சிலிங் நிர்வாகத்தால் அந்த அந்தக் கல்லூரிகளில் நடத்தப்படும்.
அனபீசியலா அட்மிஸன் முடிந்தபின்
அபீசியலா கவுன்சிலிங்(!) நடைபெறும்
ஓ!நீங்க நியூஸீலே இருக்கீங்க இல்ல?

said...

நான் இப்படி எழுதுவதற்காக மன்னிப்பு கோறுகிறேன். to be very frank with you, I am noticing a lot of differences between the doctors who have graduated now and the doctors graduated about 30 years back. Most of them nowadays graduate from private colleges and they have absolutely no idea about the present day problems. Graduates who have graduated from our government medical colleges are the best. They get training from their 3rd year itself. I have seen my colleagues who have graduated from private medical colleges struggling to start an I.V.The graduates from Russia are the worst lot. It will be better for the government to provide good facilities in the existing medical colleges. As such now almost all the districts seem to have a medical college. My feeling is that govt should look after their own medical colleges in a good way.

said...

மன்னிப்புகேட்கும் அவசியமேயில்லை.பிரச்சினையைப்
பற்றி இருவரும் ஒரேவகையில்தான் சிந்திக்கின்றொம்; தீர்வு என்ன என்பதில்தான் வேறு படுகின்றோம்
அரசுமருத்துவக்கல்லூரிகளைத் துவக்கவேண்டும் என்பதற்காகத்தான் இரண்டு கட்டணங்களையும் ஒப்பிட்டுக்காட்டினேன்
ஒருவேளை என் கருத்தைத் தெளிவாக வலியுறுத்தத் தவறிவிட்டேனோ?
வியாபாரிகளிடம் கல்வியை அடமானம் வைப்பதற்கு யார்தான் ஒப்புவர்?

said...

உடனடி தீர்வாக
ஏற்கனவே உள்ள கல்லூரிகளுக்கு வசதி செய்து கொடுத்துவிட்டு நிரந்தர தீர்வாக மேலும் சில கல்லூரிகளையாவது அரசே அமைப்பது தான் சிறந்த முடிவாக அமையும் என்பது என் கருத்து.

said...

நல்வரவு கலைஅரசன் அவர்களே
இது ஏற்புடைய கருத்துதான்