அரசியல் அறிவியல் வகுப்பு.பேராசிரியர் மன்னராட்சி முறைக்கும் மக்களாட்சி முறைக்கு முள்ள வேறுபாட்டை வரலாற்று ஆதாரங்களுடன்
விளக்கிக்கொண்டிருந்தார்.....கடைசி பென்ச் வழக்கப்படி.......பேராசிரியருக்குக் கோபம் வந்து விட்டது.கடைசி பென்ச் மாணவன் ஒருவனை சுட்டி எழுப்பிக் கேட்டார்:"நான் என்ன நடத்துகின்றேன்? நீ என்ன செய்கிறாய்?".
மாணவன் வகுப்பை சுற்றுமுற்றும் ஒருமுறை
பார்த்துவிட்டு தலையைக்குணிந்து கொண்டான்.
பேராசிரியருக்குக் கோபம் தீரவில்லை. மீண்டும் கேட்டார்:"எங்கே சொல் பார்ப்போம். மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் என்ன வித்தியாசம்?"
மாணவன் ஒருமுறை தொண்டையைக் கணைத்துக் கொண்டு சொன்னான்:"ஸார், ராஜா
மகன் ராஜாவானா அது மன்னராட்சி; மந்திரிகள்
பிள்ளைகள் மந்திரிகள் ஆவது மக்களாட்சி;ராஜ பரம்பரை முறையை ஒழித்துவிட்டு மந்திரிகள் பரம்பரை முறையைக் கொண்டு வந்தா........"
வகுப்பறை அதிர்ந்தது!
Saturday, July 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சிவஞானம் ஜி,
இது நகைச்சுவை/நையாண்டியில் வராதா? அரசியல் சமூகதில் வகைப்படுத்தி யிருக்கிறீர்களே...
அதுவும் சரிதான். குடும்ப அரசியல் தான் இப்போதய இந்திய ஜனநாயகத்தில் ட்ரெண்ட். அதை ஆதரிப்பதில் தான் அறிவு ஜீவிக்களின் நலம் உள்ளது.
வாங்க வஜ்ரா ஷங்கர் முதன்முதலா நம்ம வீட்டிற்கு வந்திருக்கீங்க...நல்வரவு!!
//இது நகைச்சுவை/நையாண்டியில் வராதா?அரசியல்/சமூகத்தில் வகைப்
படுத்தி யிருக்கிர்களே...//
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்:
இது சிரிக்கவைக்கும் நகைச்சுவையா?
'வேதனை'என்றொரு வகை குறிப்பிடப்படவில்லை.எனவே அரசியல்/சமூகமென வகைப்படுத்தினேன்
இது எப்படிங்க?
டாக்டர் புள்ளைங்க டாக்டர் ஆவறாங்க. எஞ்சிநீயர் புள்ளைங்க எஞ்சிநீயர் ஆவறாங்க.
அப்ப மந்திரி புள்ளைங்க மந்திரி ஆவக்கூடாதா? :-))))))
பேப்பர்லே பாருங்க. ஒரு அரசியல்(வியாதி)வாதி செத்துப்போனா, உடனே அவரோட
மனைவி, புள்ளைங்கதான் அவர் இடத்துக்கு வரணுமுன்னு மக்களே வற்புறுத்துறாங்களாமே!
இவ்வளோ என்னாத்துக்கு, ஒரு தாதா செத்தா அவர் மனைவி மக்கள் கூட இதேவழியைக்
கடைப்பிடிச்சுடறாங்க.
வீரப்பன் மனைவியைக்கூட அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே.
மொத்தத்துலே மக்களுக்கு 'சேவை' செய்யவே அரசியலுக்கு வராங்களாமே:-))))
தானே முயன்று தகுதிகளை வளர்த்துக்
கொண்டு தலைவராவதை யார்தான்
தடுக்கமுடியும்?
திணிப்புகள்தான் திகிலடையச் செய்கின்றன
அட நம்ம வீட்டுக்கு வருகை தந்ததுக்கு நன்றிங்க, துளசி!
ஏங்க ஜி!
ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியரே இப்படி மக்களாட்சிய கிண்டல் பண்ணா என்னாவறது?
ஹூம்.. ஆனாலும் நீங்க சொல்றா மாதிரிதானே மக்களாட்சி இருக்குது, சாரி மந்திரி ஆட்சி நடக்குது..
அது சரி உங்க 'பட்டை'வேலை செய்யுதா?
மக்களாட்சித் தத்துவத்தைக் கிண்டல்
செய்யலே;அது நடைமுறைப் படுத்தப்
படும் விதத்தைத்தான் கிண்டலடித்தான்
பட்டையா.............?
அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்கோவ்
Post a Comment